முதல் டெஸ்டில் முக்கிய சுழல் வீரரை இழக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

226
Abrar Ahmed ruled out of first Test due to knee injury

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய வீரர்களுடன் விளையாடவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தமது முன்னணி மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளரான அப்றார் அஹ்மட்டுக்கு ஓய்வு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய பூரன், ஹோல்டர்

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பேர்த் நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்போட்டிக்காக உள்வாங்கப்பட்ட அப்றார் அஹ்மட், முழங்கால் உபாதை காரணமாக தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருக்கின்றார்

இதேநேரம் அப்றார் அஹ்மட் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவுடன் ஆடவிருக்கும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டிருக்கின்றது. எனினும் அவர் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து முழுமையாக வெளியேறியது தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை 

இந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை (15) கைப்பற்றியிருக்கும் அப்றார் அஹ்மட், பாகிஸ்தான் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

அப்றார் அஹ்மட் இல்லாத நிலையில் பாகிஸ்தான் அணி சுழல்வீரரான சஜீட் கானுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தானுக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் சஜீட் கான் 22 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<