பங்களாதேஷ் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளும் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து ஒருநாள் குழாமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
>> IPL எதிர்காலம் தொடர்பில் கூறும் கிளேன் மெக்ஸ்வெல்!
தற்போது பங்களாதேஷில் காணப்படும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் பின்னர் பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் நியூசிலாந்துக்கு பயணமாகி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றன. அதன்படி இந்த ஒருநாள் தொடரில் ஆடவிருக்கும் நியூசிலாந்து அணியின் குழாமே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஒருநாள் குழாத்தில் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சௌத்தி, டேரைல் மிச்சல், மிச்சல் சான்ட்னர், கிளன் பிலிப்ஸ் மற்றும் டெவோன் கொன்வேய் போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
டொம் லேதம் மூலம் வழிநடாத்தப்படவிருக்கும் நியூசிலாந்து குழாத்தில் இரண்டு அறிமுக வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் 26 வயது நிரம்பிய சகலதுறைவீரரான ஜோஸ் கிளார்க்ஸன், மற்றும் 22 வயது நிரம்பிய வில் ஓ ரூர்க்கே ஆகியோர் நியூசிலாந்தினை முதன் முறையாக சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.
இதேநேரம் நியூசிலாந்திற்காக அண்மையில் T20I போட்டிகளில் அறிமுகமாகிய மணிக்கட்டு சுழல்வீரர் ஆதி அஷோக்கும் பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அஷோக்கிற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
>> தென்னாப்பிரிக்காவில் உலகக் கிண்ணம் ஆடுவது சாதகமே – அரவிந்த
இதேவேளை நியூசிலாந்து அணியின் முன்னணி சுழல்வீரரான இஷ் சோதி பங்களாதேஷிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மாத்திரம் ஆடுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த வீரர்கள் தவிர நியூசிலாந்து குழாம் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடிய வீரர்கள் மூலம் பூரணப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து ஒருநாள் குழாம்
டொம் லேதம் (தலைவர்), ஆதி அஷோக் (2ஆவது மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டிகள்), பின் அலன், டொம் பிளன்டல், மார்க் சாப்மன், ஜோஷ் கிளார்க்ஸன், ஜேகப் டப்(f)பி, கைல் ஜேமிசன், அடம் மில்னே, ஹென்ரி நிக்கோல்ஸ், வில் ஓ ரோர்கே, ரச்சின் ரவீந்திரா, இஸ் சோதி (1ஆவது ஒருநாள் போட்டி), வில் யங்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<