சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் சகலதுறைவீரரான சுனீல் நரைன் குறிப்பிட்டுள்ளார்.
>>இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியாக T20I போட்டி ஒன்றில் ஆடியிருந்த சுனீல் நரைன் தனது எட்டு வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுக்கும் விடயத்தினை தனது இன்ஸ்டாக்கிரம் கணக்கு வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
”நான் பொதுவாக சில வார்த்தைகளை மாத்திரம் பேசுகின்றவன் என்கிற போதும், எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக தனிப்பட்ட ரீதியில் உதவி செய்து மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவம் செய்யும் எனது கனவினை நனவாக்கிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என சுனீல் நரைன் தனது இன்ஸ்டாக்கிரம் கணக்கு வாயிலாக தனது ஓய்வு பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார்.
>>இலங்கை கிரிக்கெட் செயலாளர் பதவி திறப்பு
கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டி ஒன்றின் ஊடாக அறிமுகம் பெற்ற சுனீல் நரைன் 65 ஒருநாள் மற்றும் 51 T20 போட்டிகள் அடங்கலாக மொத்தமாக 122 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கின்றார். அத்துடன் நரைன் கடந்த 2012ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்தினை வெல்வதற்கு முக்கிய காரணமாக மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் நரைன் ஓய்வு பெற்ற போதிலும் தொடர்ந்து T20 லீக் போட்டிகளில் விளையாடுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது. நரைன் இந்திய பிரீமியர் லீக், கரீபியன் பிரிமியர் லீக், மேஜர் லீக் மற்றும் இன்டர்நஷனல் லீக் போன்ற T20 லீக் போட்டித் தொடர்களில் நைட்ரைடர்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<