இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்ல தற்காலிகமான சில தீர்மானங்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> பயிற்சிகளை இரத்து செய்தது இலங்கை அணி
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், தற்போதைய நிலைமைகள் குறித்து விபரிக்கும் கடிதம் ஒன்றினை வெளியிட்டிருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
”2015ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கிரிக்கெட்டினை நோக்கும் போது சர்வதேசத்திலும் சரி உள்ளூரிலும், அதன் படித்தரம் குறைந்திருப்பதனை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இலங்கையின் கிரிக்கெட்டானது (இப்போதைய நாட்களில்) வீரர்களின் நன்னடத்தை விதி மீறல்கள், நிர்வாக முகாமை ஊழல், நிதிப் புகார்கள் மற்றும் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் போன்ற விடயங்களைச் சுற்றியே காணப்படுகின்றது. இந்த நாட்டின் விளையாட்டு அமைச்சராக சிறந்த நிர்வாகத்தோடு, ஊழலுக்கு எதிராக போராடி, ஒழுக்கம் அனைத்து இடங்களிலும் பேணப்படுவதனை உறுதிப்படுத்துவது அவசியமாக இருக்கின்றது.”
எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டே இலங்கை கிரிக்கெட்டினை சீரமைக்க உடனடியாக சில தற்காலிக தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக விளையாட்டு அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.
>> இலங்கை அணியின் பிரபல ரசிகர் “அங்கில் பேர்சி” மரணம்
”நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, நாம் அனைவரும் விரும்புகின்ற விளையாட்டு ஒன்றின் விடயங்களை சிறந்த வகையில் நிர்வகிப்பதற்காகவும், சட்டத்தினை சரியான முறையில் நிலைநிறுத்துவதற்காகவும், விளையாட்டின் தொழில்முறைமைகளைப் பேணும் விதமாகவும், அதன் புனித தன்மைக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலும் தற்காலிக தீர்வுகள் சிலவற்றை வழங்க விருப்பம் கொண்டிருக்கின்றேன்.”
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<