இலங்கை அணியுடன் இணைந்த மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர்

Cricket World Cup 2023

3525
Cricket World Cup 2023

உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்துடன் வேகப்பந்துவீச்சாளர் பிரமோத் மதுசான் இணைந்து இன்று புதன்கிழமை (01) பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பிரமோத் மதுசான் உலகக்கிண்ண குழாத்தில் இலங்கை அணியின் மேலதிக வீரராக இணைக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

>>சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்

ஆரம்பத்தில் இலங்கை அணியின் மேலதிக வீரராக பெயரிடப்பட்டிருந்த சாமிக்க கருணாரத்ன, உபாதைக்குள்ளான அணித்தலைவர் தசுன் ஷானகவுக்கு பதிலாக பிரதான குழாத்தில் இணைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டு இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது மதீஷ பதிரண மற்றும் லஹிரு குமார ஆகியோர் உபாதைக்கு முகங்கொடுத்து தொடரிலிருந்து நீக்கப்பட்டனர். எனவே மெதிவ்ஸ் மற்றும் சமீர ஆகியோர் பிரதான குழாத்தில் இடம்பெற்றனர்.

எனவே தற்போது மேலதிக வீரராக பிரமோத் மதுசான் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

பிரமோத் மதுசான் இலங்கை அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இவர் அணியுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பார் என்பதுடன், பிரதான குழாத்தில் உபாதைகள் ஏற்பட்டால் மாற்றீடு வீரராக அணியில் இணைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<