இலங்கை அணியின் பிரபல ரசிகர் “அங்கில் பேர்சி” மரணம்

Sri Lanka Cricket

374
Sri Lanka Cricket

சர்வதேச அளவில் அறியப்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல ரசிகர் பேர்சி அபேசேகர தன்னுடைய 87வது வயதில் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய 87வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவுக்கு முகங்கொடுத்திருந்தார்.

>>இரண்டு மாற்றங்களுடன் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை அணி

இந்தநிலையில் உடல் நலக்குறைவுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் பேர்சி அபேசேகர இன்று திங்கட்கிழமை (30)  இயற்கை எய்தினார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பேர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை கடந்த செப்டம்பர் மாதம் 5 மில்லியன் ரூபாவினை வழங்கியிருந்தது.

“அங்கிள் பேர்சி” என அழைக்கப்படும் பேர்சி அபேசேகர இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால ரசிகர்களில் ஒருவராக இருந்துள்ளார். இவர் தேசியக் கொடியினை ஏந்தி கடந்த 1979ம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய ரசிகராக மைதானத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<