லங்கா T10 தொடரின் வீரர்கள் ஏலத்துக்கான திகதி அறிவிப்பு

Lanka T10 League 2023

728
T10

இலங்கையில் முதன்முறையாக நடைபெறவுள்ள T10 தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 10ம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா T10 தொடர் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரினை டி டென் ஸ்போர்ட்ஸ் முகாமைத்துவம் மற்றும் (T Ten Sports Management) டி டென் கிளோபல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இனவேடிவ் புரொடொக்ஷன் குழுமம் (T Ten Global Sports and Innovative production Group) ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. 

>> உலகக் கிண்ண நடப்புச் சம்பியனை வீழ்த்திய இலங்கை

முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் 6 அணிகள் மோதவுள்ளன. 

குறித்த ஆறு அணிகளுக்குமான பெயர்கள் இதுவரை வெளியிடப்படாத போதும், இலங்கை கிரிக்கெட்டை மெழுகேற்ற உதவிய ஐந்து நகரங்களின் பெயர்கள் அணிகளுக்கு வைக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வீரர்கள் தங்களுடைய பெயர்களை விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 5ம் திகதிவரை வீரர்கள் தங்களை பெயர்களை இணைத்துக்கொள்ள முடியும். 

அதன்படி வீரர்கள் www.ttensports.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தங்களை விண்ணப்பித்துக்கொள்ள முடியும் என்பதுடன், முன்னாள் இலங்கை வீரர்களும் இந்த இணையத்தளம் மூலமாக தங்களுடைய பெயர்களை விண்ணப்பித்துக்கொள்ள முடியும். எனினும் இலங்கையின் தற்போதைய வீரர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடாக இணைத்துக்கொள்ளப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<