இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தின் மேலதிக வீரர்களாக அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இன்று வியாழக்கிழமை (19) இந்தியா நோக்கி புறப்படவுள்ளதாக கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை!
இலங்கை அணியில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த அணித்தலைவர் தசுன் ஷானக உலகக்கிண்ணத் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மேலதிக வீரர்கள் பட்டியலில் இருந்த சாமிக்க கருணாரத்ன அணியில் இடம்பிடித்திருந்தார்.
உலகக்கிண்ண குழாத்தில் மேலதிக வீரர்கள் பட்டியலில் மூவரை அழைத்துச்செல்ல முடியும். அவர்கள் முதன்மையான குழாத்தில் இடம்பெறாவிட்டாலும், வீரர்களுக்கு உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் அணியில் இணைந்துக்கொள்ள முடியும்.
இவ்வாறான நிலையில் மேலதிக வீரர்களாக துஷ்மந்த சமீர மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெறவுள்ளனர். இவர்கள் அணியுடன் இணைந்திருந்தாலும், போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இலங்கை அணியின் வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் அணியில் இணைந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<