சகீப் அல் ஹஸன், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு உபாதை

Cricket World Cup 2023

290

நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் பங்களாதேஷ் அணித்தலைவர் கேன் சகீப் அல் ஹஸன் ஆகியோர் உபாதைகளுக்கு முகங்கொடுத்தனர். 

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (13) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. 

அவுஸ்திரேலிய போட்டியில் மாற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை அணி?

இந்தப் போட்டியின் போது சகீப் அல் ஹஸன் துடுப்பெடுத்தாடும் போது உபாதைக்கு முகங்கொடுத்தார். இவருடைய இடது தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதுடன், இவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

அதேநேரம் இந்த உலகக்கிண்ணத்தில் முதல் போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சனின் இடது பெருவிரலில் உபாதை ஏற்பட்டுள்ளது. இவர் இந்தப் போட்டியில் 78 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றிருந்தார். இந்தநிலையில் வில்லியம்சனுக்கும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<