ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாகிய சமரி அதபத்து!
இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ள செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவாகியுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் லவுரா வொல்வார்ட் மற்றும் நாடின் டி கிளெர்க் ஆகியோரை பின்தள்ளி சமரி அதபத்து இந்த விருதை வென்றுள்ளார்.
>> குசல் மெண்டிஸின் உடல் நிலை குறித்து வெளியாகிய அறிவிப்பு
இலங்கை மகளிர் அணி கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20i தொடரை 2-1 என வெற்றிக்கொண்டது. வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி தொடர் வெற்றியொன்றினை பதிவுசெய்தது.
இந்த தொடரில் சமரி அதபத்து துடுப்பாட்டத்தில் 55 மற்றும் 44 ஓட்டங்களை வேகமாக குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்ததுடன், 5 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இந்தியா, தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்த்தாடி 203 ஓட்டங்களையும் இவர் குவித்திருந்தார்.
சமரி அதபத்து சர்வதேச தரவரிசையில் ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகள் பட்டியலில் 3வது இடத்தையும், T20i துடுப்பாட்ட தரவரிசையில் 7வது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<