இந்த ஆண்டுக்கான (2023) லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் உபாதைக்குள்ளாகியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான வனிந்து ஹஸரங்க, உபாதைக்கான தனது சத்திரசிகிச்சையினை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ரிஸ்வான், சபீக்கின் சதங்களோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி
LPL தொடரில் பி–லவ் கண்டி அணிக்காக ஆடிய வனிந்து ஹஸரங்க அதன் போது ஏற்பட்ட தசை உபாதை காரணமாக அதன் பின்னர் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர், அதனை அடுத்து உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றில் பங்கேற்கும் வாய்ப்புக்களை சத்திர சிகிச்சை ஒன்றினை மேற்கொள்ள இருந்ததன் காரணமாக இழந்திருந்தார்.
வனிந்து ஹஸரங்க இல்லாத இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியானது பந்துவீச்சில் மிகப் பெரும் பின்னடைவை அண்மைய நாட்களில் சந்தித்திருந்தது.
விடயங்கள் இவ்வாறு இருக்க நேற்று (10) தனது உத்தியோகபூர்வ X கணக்கு வாயிலாக கருத்து வெளியிட்டிருக்கும் வனிந்து ஹஸரங்க, தசை உபாதைக்கான தனது சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக கூறியிருப்பதோடு விரைவில் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
Hi everyone,
I am happy to inform you that my surgery to repair the defect in my hamstring muscle/tendon was a success, thanks to the brilliant work of Prof. Fares Haddad and the amazing hospital staff.
I will see you soon.
WH49 😇🤞 pic.twitter.com/0HkaewRyG4
— Wanindu Hasaranga (@Wanindu49) October 10, 2023
அந்தவகையில் வனிந்து ஹஸரங்க ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<