ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் உபாதை காரணமாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியின் போது தசுன் ஷானகவின் இடது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக இரண்டாவது பயிற்சிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
MCCயில் சங்காவிற்கு புதிய பதவி
தசுன் ஷானகவின் உபாதை தொடர்பில் வைத்தியர்கள் அவதானித்து வருவதுடன், முதல் பயிற்சிப் போட்டியில் உபாதைக்குள்ளான குசல் பெரேராவும் இரண்டாவது பயிற்சிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குசல் பெரேராவின் தோற்பட்டையில் வலி ஏற்பட்டதன் காரணமாக துடுப்பாட்டத்தின் இடையில் பெவிலியனுக்கு திரும்பியிருந்தார். இந்தநிலையில் இரண்டாவது போட்டியிலிருந்தும் இவர் நீக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் இவரின் உபாதையை அவதானித்து வருகின்றனர்.
தசுன் ஷானக மற்றும் குசல் பெரேரா ஆகியோர் உபாதைகளுக்கு முகங்கொடுத்திருந்தாலும் முதல் போட்டிக்குள் தயாராகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதேநேரம், இளம் வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரணவுக்கு இன்றைய பயிற்சிப்போட்டியிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை உபாதை காரணமாக அணியுடன் பயணிக்காமலிருந்த சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன, நாளை புதன்கிழமை (04) அணியுடன் இணைந்துக்கொள்வார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<