மெரைல்போன் கிரிக்கெட் கழக (MCC) உலக கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைமை அதிகாரியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
>> உலகக் கிண்ண போட்டி வர்ணனையாளர்கள் அறிவிப்பு
கிரிக்கெட் போட்டிகளின் சட்டதிட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாக இங்கிலாந்தின் பழைமைமிக்க மெரைல்போன் கிரிக்கெட் கழகம் காணப்பட்டு வருகின்றது. இந்த கிரிக்கெட் அமைப்பின் தலைவராக கடந்த காலங்களில் செயற்பட்டு இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்திருந்த குமார் சங்கக்கார தற்போது குறிப்பிட்ட அமைப்பின் உலக கிரிக்கெட் கூட்டமைப்பினை தலைமை தாங்கவிருக்கின்றார்.
மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் உலகக் கிரிக்கெட் கூட்டமைப்பில் ஏற்கனவே அங்கம் வகித்திருந்த குமார் சங்கக்கார, தற்போது தனது புதிய பொறுப்பின் மூலம் மெரைல்போன் கிரிக்கெட் கழகத்திற்கு பெறுமதி சேர்க்கவிருக்கின்றார்.
மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களாக இந்தியாவின் முன்னாள் தலைவர் சௌராவ் கங்குலி, ஹீத்தர் நைட், ஜஸ்டின் லேங்கர், இயன் மோர்கன் மற்றும் தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அமைப்பில் இந்த முன்னணி வீரர்களுடன் இணைந்து குமார் சங்கக்கார பணியாற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<