19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது

U19 World Cup 2024

349

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் பெப்ரவரி 4ம் திகதிவரை நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

பதினைந்தாவது தடவையாக நடைபெறவுள்ள இந்த 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி

இலங்கையில் மூன்று தடவைகள் 19 வயதின் கீழ் உலகக்கிண்ணம் நடைபெற்றுள்ளதுடன், இம்முறை தங்களுடைய முதல் போட்டியில் சிம்பாப்வே அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

அதேநேரம் நடப்பு சம்பியனான இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை ஜனவரி 14ம் திகதி கொழும்பு பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரின் போட்டி கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது. 16 அணிகள் 4 குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும் என்பதுடன், குழுவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சுபர் 6 போட்டிகளில் மோதும். 

குழு நிலைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் (12 அணிகள்) சுபர் 6 சுற்றில் இரண்டு குழுக்களாக வகுக்கப்படும் (தலா 6 அணிகள்). இதில் முதல் சுற்றில் A மற்றும் D குழுக்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் ஒரு குழுவிலும், B மற்றும் C குழுக்களில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் மற்றுமொரு குழுவிலும் சுபர் 6 சுற்றில் சேர்த்துக்கொள்ளப்படும். 

சுபர் 6 சுற்றில் ஒரு அணிக்கு 2 போட்டிகள் வீதம் நடைபெறும். முதல் சுற்றில் அணிகள் பிடித்த இடங்களுக்கு ஏற்ப போட்டிகள் நடைபெறும். உதாரணமாக குழு Aயில் முதலிடத்தை பிடித்த அணி குழு Dயில் 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்த அணிகளுடன் மோதும்சுபர் 6 சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும் என்பதுடன், அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெறும். இறுதிப்போட்டி பெப்ரவரி 4ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<