இந்தியாவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான குழாத்திலிருந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் என்ரிச் நோக்கியா மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
என்ரிச் நோக்கியா மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் உபாதைகள் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
T20 உலகக் கிண்ணத்துக்கான மூன்று மைதானங்கள் அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது என்ரிச் நோக்கியாவின் முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்ததுடன், சிசண்டா மகலாவின் முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது.
உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை இவர்கள் பெறமாட்டார்கள் என்ற காரணத்தால் மகலா மற்றும் நோக்கியா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக சகலதுறை வீரர் அண்டிலே பெஹலுக்வாயோ மற்றும் லிஷார்ட் வில்லியம்ஸ் ஆகியோர் உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி, இலங்கை அணியை அடுத்த மாதம் 7ஆம் திகதி டெல்லியில் வைத்து எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<