இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேறும் வேகப்பந்துவீச்சாளர்

New Zealand tour of England 2023

266

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20i தொடருக்கான இங்கிலாந்து குழாத்திலிருந்து உபாதை காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டொங்கு விலகியுள்ளார்.

புதுமுக வேகப்பந்துவீச்சாளர் ஜோன் டேர்னர் ஆரம்பத்தில் இங்கிலாந்து T20i குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த போதும் அவர் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆசியக் கிண்ணத்தில் இருந்து விலகும் துஷ்மந்த, வனிந்து

இவருக்கு பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்த ஜோஷ் டொங்கு அணியில் இணைக்கப்பட்டார். எனினும் இவருக்கும் உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஜோஷ் டொங்கு அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் கிரிஸ் ஜோர்டன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். கிரிஸ் ஜோர்டன் இதுவரை 87 T20i போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 432 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட T20i தொடர் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<