லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸிற்கு எதிராக கோல் டைடன்ஸ் அணியானது 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.
>>த்ரில் வெற்றியோடு பிளே-ஓப் வாய்ப்பினை உறுதி செய்த கண்டி அணி
முன்னதாக கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணியானது, கோல் டைடன்ஸ் அணியினுடைய கசுன் ராஜிதவின் வேகத்திற்கு தடுமாறியதோடு ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
பின்னர் இந்த தடுமாற்றத்தில் இருந்து மீள முடியாத ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 89 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 22 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதேநேரம் கோல் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 90 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் டைடன்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை வெறும் 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 90 ஓட்டங்களுடன் அடைந்தது.
கோல் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக டிம் செய்பார்ட் 42 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை எடுத்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்ய காரணமாகியிருந்தார்.
இதேநேரம் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க, மகீஷ் தீக்ஷன மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களின் பந்துவீச்சு வீணாகியது.
>>குழந்தைகளின் உயிர்காப்பிற்காக 4.5 மில்லியன் திரட்டியுள்ள LPL தொடர்
போட்டியின் ஆட்டநாயகனாக கசுன் ராஜித தெரிவாகினார். இப்போட்டியின் வெற்றியோடு கோல் டைடன்ஸ் அணியானது LPL தொடரின் பிளே-ஒப் சுற்றுக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தினை தக்க வைக்க ஜப்னா கிங்ஸ் ஏனைய அணிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Sohan de Livera b Kasun Rajitha | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Rahmanullah Gurbaz | c Chad Bowes b Kasun Rajitha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Chris Lynn | b Lahiru Kumara | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Dunith Wellalage | c Sohan de Livera b Tabraiz Shamsi | 22 | 31 | 4 | 0 | 70.97 |
Shoaib Malik | b Kasun Rajitha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
David Miller | c & b Kasun Rajitha | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Asela Gunaratne | lbw b Shakib Al Hasan | 7 | 8 | 1 | 0 | 87.50 |
Thisara Perera | b Tabraiz Shamsi | 13 | 9 | 1 | 1 | 144.44 |
Maheesh Theekshana | not out | 13 | 23 | 0 | 0 | 56.52 |
Dilshan Madushanka | b Lahiru Kumara | 12 | 29 | 1 | 0 | 41.38 |
Nuwan Thushara | run out () | 7 | 3 | 0 | 1 | 233.33 |
Extras | 4 (b 1 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 89/10 (20 Overs, RR: 4.45) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 4 | 0 | 20 | 4 | 5.00 | |
Lahiru Kumara | 4 | 1 | 13 | 2 | 3.25 | |
Dasun Shanaka | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Shakib Al Hasan | 4 | 0 | 13 | 1 | 3.25 | |
Tabraiz Shamsi | 4 | 0 | 19 | 2 | 4.75 | |
Seekkuge Prasanna | 2 | 0 | 6 | 0 | 3.00 | |
Lahiru Samarakoon | 1 | 0 | 9 | 0 | 9.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Bhanuka Rajapaksa | c Shoaib Malik b Maheesh Theekshana | 15 | 11 | 3 | 0 | 136.36 |
Tim Seifert | c Thisara Perera b Dilshan Madushanka | 55 | 42 | 5 | 1 | 130.95 |
Chad Bowes | not out | 13 | 23 | 0 | 0 | 56.52 |
Shakib Al Hasan | c David Miller b Shoaib Malik | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Dasun Shanaka | not out | 2 | 1 | 0 | 0 | 200.00 |
Extras | 3 (b 1 , lb 0 , nb 0, w 2, pen 0) |
Total | 90/3 (13.3 Overs, RR: 6.67) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 4 | 0 | 28 | 1 | 7.00 | |
Maheesh Theekshana | 4 | 0 | 12 | 1 | 3.00 | |
Nuwan Thushara | 4 | 0 | 38 | 0 | 9.50 | |
Dunith Wellalage | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Shoaib Malik | 0.3 | 0 | 2 | 1 | 6.67 |
முடிவு – கோல் டைடன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<