இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில் கெயல் ஜெமிஸன் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள முக்கியமான தொடராக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் அமைந்துள்ளது.
பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புடன் ஜப்னா அணிக்கு மூன்றாவது வெற்றி
நியூசிலாந்து அணிக்காக 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டிரெண்ட் போல்ட் கடந்த இரண்டு 50 ஓவர்கள் உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்ததுடன், அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
டிரெண்ட் போல்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ள அதேநேரம் முதுகுப்பகுதியில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த கெயல் ஜெமிஸன் உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். எனினும் உபாதையிலிருந்து குணமடைந்துவரும் மைக்கல் பிரேஸ்வல் அணியில் இடம்பெறவில்லை.
இவருடன் ஜிம்மி நீசம் மற்றும் மார்க் செப்மன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இணையவில்லை என்பதுடன், இஸ் சோதி இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.
அணித்தலைவராக டொம் லேத்தம் செயற்படவுள்ள நிலையில், உபாதையிலிருந்து குணமடைந்து வருகின்ற கேன் வில்லியம்சன் நியூசிலாந்து குழாத்துடன் இங்கிலாந்து செல்லவுள்ளார். குழாத்தில் இடம்பெறாத இவர், அங்கு சென்று பயிற்சிகள் மற்றும் உபாதையிலிருந்து குணமடைவதற்கான பணிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 8ம் திகதி முதல் 15ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து குழாம்
டொம் லேத்தம் (தலைவர்), பின் எலன், டிரெண்ட் போல்ட், டெவொன் கொன்வே, லொக்கி பேர்கஸன், மெட் ஹென்ரி, கெயல் ஜெமிஸன், அடம் மில்ன், டார்லி மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்சல் சென்ட்னர், டிம் சௌதி, வில் யங்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<