சிடி லீக் தலைவர் கிண்ணத்தை வென்றது கொழும்பு அணி

City League President's Cup 2023

314
Colombo winners for the 4th time in 5 finals - City League President Cup 2023

மாளிகாவத்தை யூத் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட கொழும்பு கால்பந்து கழகம் சிடி கால்பந்து லீக் தலைவர் கிண்ணம் 2023 தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது. 

மொத்தம் 5 அணிகள் பங்கேற்ற இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் மாளிகாவத்தை யூத் அணிகள் தெரிவாகியிருந்தன. இறுதிப் போட்டி கொழும்பு சிடி கால்பந்து லீக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றது

இந்த ஆட்டம் ஆரம்பித்த நிமிடம் முதல் கொழும்பு கால்பந்து அணி வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. எனினும் அவர்கள் கோல் நோக்கி தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகள் அனைத்தையும் மாளிகாவத்தை கோல் காப்பாளர் ஹஸான் மற்றும் பின்கள வீரர்கள் சிறந்த முறையில் தடுத்தனர் 

மறுமுனையில் மாளிகாவத்தை வீரர்களுக்கு முதல் பாதியில் இரண்டு பிரீ கிக் வாய்ப்புக்கள் எதிரணியின் கோல் எல்லையில் வைத்து கிடத்த போதும், அவை சிறந்த முறையில் அமையவில்லை. எனவே, முதல் பாதி ஆட்டம் கோல்கள் இன்றி முடிவுற்றது 

முதல் பாதி: கொழும்பு கா. 0 – 0 மாளிகாவத்தை  

 எனினும், இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் மாளிகாவத்தை யூத் வீரர்கள் தமது ஆட்ட வேகத்தை அதிகரித்து சிறந்த பந்துப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டு எதிரணிக்கு பலத்த சவாலை கொடுத்தனர்

போட்டி 60 நிமிடங்களை அண்மித்த நிலையில் கொழும்பு அணியின் கோல் பெட்டிக்கு அண்மையில் வைத்து கிடைத்த பிரீ கிக்கின்போது உதைந்த பந்தை கொழும்பு கோல் காப்பாளர் இம்ரான் சிறந்த முறையில் பாய்ந்து தடுத்தார்

எனினும், அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு கால்பந்து அணியின் பின்கள வீரர் ஷரித்த ரத்னாயக்க எதிரணியின் கோல் எல்லைவரை வந்து கோல் நோக்கி உதைந்த பந்து கம்பத்தில் பட்டு மீண்டும் வர, அதனை ஆகிப் ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார் 

மீண்டும் 64ஆவது நிமிடத்தில் அஹமட் சஸ்னி வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்மூலம் ஆகிப் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்

எனவே, போட்டி நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற கொழும்பு கால்பந்து கழகம் நான்காவது முறை சிடி கால்பந்து லீக் தலைவர் கிண்ணத்தில் சம்பியன் கிண்ணத்தை வென்றது 

முதல் பாதி: கொழும்பு கா. 2 – 0 மாளிகாவத்தை  

விருதுகள்  

  • இறுதிப் போட்டியின் சிறந்த வீரர்மொஹமட் ஆகிப் (கொழும்பு கா.) 
  • தொடரின் சிறந்த கோல்காப்பாளர்மொஹமட் இம்ரான் (கொழும்பு கா. 
  • தொடரின் சிறந்த பின்கள வீரர்கரீம் பாசில் (மா.யூத் ) 
  • தொடரின் சிறந்த மத்தியகள வீரர்அஹமட் சஸ்னி (கொழும்பு கா. 
  • தொடரின் சிறந்த முன்கள வீரர்மொஹமட் ஆகிப் (கொழும்பு கா. 
  • தொடரின் சிறந்த வீரர்மொஹமட் சர்பான் (மா.யூத் ) 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<