செய்பர்ட்டின் அதிரடி ஆட்டத்துடன் கோல் அணிக்கு இரண்டாவது வெற்றி

Lanka Premier League 2023

269
Lanka Premier League 2023

பி லவ் கண்டி அணிக்கு எதிராக நடைபெற்ற LPL தொடரின் ஐந்தாவது போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி டிம் செய்பர்ட்டின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

முதல் போட்டியில் சுபர் ஓவர் வெற்றியை பதிவுசெய்த கோல் டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

>>HIGHLIGHTS – B-Love Kandy vs Galle Titans – Lanka Premier League 2023 | Match 05<<

கோல் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்தில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்ததுடன் 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் சற்று மந்தமாக இருந்த போதும், கோல் டைட்டன்ஸ் அணிக்காக அடுத்து களமிறங்கிய டிம் செய்பர்ட் அதிரடியான ஆட்டமொன்றை வெளிப்படுத்தினார்.

அபாரமாக ஆடிய இவர் அரைச்சதம் கடந்து வெறும் 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள மறுமுனையில் சகீப் அல் ஹஸன் 21 பந்துகளில் 30 ஓட்டங்களை அடித்தாடினார். இவர்களுடைய 95  ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன் கோல் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த ஆடுகளத்தை பொருத்தவரை 150 இற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கை மிகவும் கடினமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பி லவ் கண்டி அணி சவாலான  இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

>>Photos – Galle Titans vs B-Love Kandy | LPL 2023 – Match 05<<

முதல் போட்டியில் பி லவ் கண்டி அணிக்கு இருந்த மிகப்பெரிய சிக்கலான துடுப்பாட்டம் இந்தப் போட்டியிலும் மோசமானதாக அமைந்திருந்தது. ஆரம்பம் முதல் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவற, ஒரு ஓட்டத்திலிருந்து விக்கெட்டுகள் பறிகொடுக்கப்பட தொடங்கியது.

குறிப்பிடத்தக்க துடுப்பாட்ட பிரகாசிப்பை தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் வனிந்து ஹஸரங்க போன்ற முன்னணி வீரர்கள் வழங்க தவறியிருந்ததுடன், ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர். அதுமாத்திரமின்றி கோல் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய பி லவ் கண்டி அணிக்காக மூன்று வீரர்கள் மாத்திரமே இரட்டையிலக்க ஓட்டங்களை கடந்தனர்.

>>WATCH – சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் வாய்ப்புக்காக காத்திருக்கும் தேனுரதன் | LPL 2023

இதில் அஷேன் பண்டார அதிகபட்சமாக 27 ஓட்டங்களையும், இசுரு உதான மற்றும் தனுக தபரே ஆகியோர் முறையே 16 மற்றும் 12 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இவ்வாறான மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கண்டி அணி 17.1 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 97 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

கோல் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் ரிச்சர்ட் கிராவா, கசுன் ராஜித, சகீப் அல் ஹஸன் மற்றும் டெப்ரைஷ் சம்ஷி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர். இந்த போட்டியின் தோல்வியுடன் கண்டி அணி தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதுடன், கோல் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிது்துள்ளது.

cURL Error #:Failed to connect to cricket-api.stats.thepapare.com port 443: Connection refused

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<