கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் இணையும் பங்களாதேஷ் வீரர்

Lanka Premier League 2023

231

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் பங்களாதேஷ் வேகப் பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான LPL தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஆகஸ்ட் 20ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது.

போட்டித்தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று அணிக்குழாம்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அணிகளில் ஒருசில மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பங்களாதேஷ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் தேசிய அணிக்காக 31 T20i போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம், மொத்தமாக 84 T20 போட்டிகளில் விளையாடி இவர் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<