சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநிறைவில் இலங்கை கிரிக்கெட் அணியானது மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருக்க பாகிஸ்தான் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றது.
>>இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணியில் அசித பெர்னாண்டோ
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது. குறிப்பாக ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறும் நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்ற சந்தர்ப்பம் ஒன்றிலேயே இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆரம்பமாகியிருந்தது.
மழை காரணமாக சற்று தாமதமாக இடம்பெற்றிருந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன முதலில் தனது தரப்பிற்காக துடுப்பாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருந்தார். இப்போட்டிக்கான இலங்கை குழாம் கசுன் ராஜிதவிற்குப் பதிலாக அசித பெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்க, டில்சான் மதுசங்க 164ஆவது வீரராக டெஸ்ட் அறிமுகம் பெற்றிருந்தார். மறுமுனையில் பாகிஸ்தான் இப்போட்டியில் மாற்றமின்றி களமிறங்கியது.
>>Photos – Pakistan tour of Sri Lanka 2023 | 2nd Test | Day 1<<
இலங்கை குழாம் பதினொருவர்
திமுத் கருணாரட்ன (தலைவர்), நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, டில்சான் மதுசங்க, அசித பெர்னாண்டோ
பாகிஸ்தான் குழாம் பதினொருவர்
அப்துல்லா சபீக், பாபர் அசாம் (தலைவர்), அப்ரார் அஹ்மட், இமாம்–உல்–ஹக், நசீம் ஷா, நோமான் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அஹ்மட், சௌத் சகீல், சஹீன் அப்ரிடி, ஷான் மசூத்
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணியானது தொடக்கத்திலேயே தடுமாற்றமான ஆரம்பத்தினைப் பெற்றது. அணியின் ஆரம்பவீரர்களில் ஒருவரான நிஷான் மதுஷ்க ஷான் மசூத் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டு வெறும் 04 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். அவரின் பின்னர் புதிய துடுப்பாட்டவீரர்களாக குசல் மெண்டிஸ் (06), அஞ்செலோ மெதிவ்ஸ் (09) ஆகியோர் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஆட்டமிழக்க, அணித்தலைவர் திமுத் கருணாரட்னவின் விக்கெட்டும் அவர் 17 ஓட்டங்கள் பெற்றிருந்த போது பறிபோனது. இதனால் போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே இலங்கை அணி 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இந்த நேரத்தில் பொறுப்பான இணைப்பாட்டம் ஒன்றை தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஞய டி சில்வா ஜோடி இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக உருவாக்கியதோடு குறித்த இணைப்பாட்டம் முதலாம் நாளின் மதிய போச இடைவேளையினைத் தாண்டி சிறிது நேரம் வரை நீடித்தது. தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக ஆட்டமிழந்த தினேஷ் சந்திமால் 04 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றார். தினேஷ் சந்திமால் தனன்ஞய டி சில்வா உடன் இணைந்து இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>>Pakistan tour of Sri Lanka 2023<<
தினேஷ் சந்திமாலின் பின்னர் இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானின் சுழல்வீரர் அப்றார் அஹ்மட்டின் பந்துவீச்சினை எதிர்கொள்வதில் தடுமாறியதோடு இந்த தடுமாற்றத்தில் இருந்து மீள முடியாமல் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 166 ஓட்டங்களையே முதல் இன்னிங்ஸில் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக தனன்ஞய டி சில்வா தன்னுடைய 13ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்தவீச்சில் அப்றார் அஹ்மட் 69 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நஷீம் ஷா 03 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
>>லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடர் டிக்கெட் விற்பனை ஆரம்பம்
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணியானது போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி 28.3 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களைக் எடுத்துக் காணப்படுகின்றது. களத்தில் பாகிஸ்தான் அணிக்காக ஆட்டமிழக்காது நிற்கும் அப்துல்லா சபீக் 74 ஓட்டங்களையும், பாபர் அசாம் 08 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றனர். இதேவேளை பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸிற்காக அரைச்சதம் விளாசியிருந்த ஷான் மசூத் தன்னுடைய 7ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 04 பௌண்டரிகள் அடங்கலாக 47 பந்துகளில் 51 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
பாகிஸ்தான் அணியில் பறிபோன இரண்டு விக்கெட்டுக்களையும் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அசித பெர்னாண்டோ கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | run out (Shan Masood) | 4 | 9 | 1 | 0 | 44.44 |
Dimuth Karunaratne | b Naseem Shah | 17 | 37 | 3 | 0 | 45.95 |
Kusal Mendis | c Mohammad Rizwan b Shaheen Shah Afridi | 6 | 9 | 1 | 0 | 66.67 |
Angelo Mathews | c Sarfaraz Ahmed b Naseem Shah | 9 | 26 | 1 | 0 | 34.62 |
Dinesh Chandimal | c Imam-ul-Haq b Naseem Shah | 34 | 60 | 4 | 0 | 56.67 |
Dhananjaya de Silva | c Saud Shakeel b Abrar Ahmed | 57 | 68 | 9 | 1 | 83.82 |
Sadeera Samarawickrama | c Abdullah Shafique b Abrar Ahmed | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Ramesh Mendis | c Saud Shakeel b Abrar Ahmed | 27 | 44 | 3 | 0 | 61.36 |
Prabath Jayasuriya | run out (Shan Masood) | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Asitha Fernando | b Abrar Ahmed | 8 | 24 | 2 | 0 | 33.33 |
Dilshan Madushanka | not out | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 2 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 166/10 (48.4 Overs, RR: 3.41) |
Fall of Wickets | 1-9 (2.4) Nishan Madushka, 2-23 (6.1) Kusal Mendis, 3-35 (12.5) Angelo Mathews, 4-36 (14.1) Dimuth Karunaratne, 5-121 (33.5) Dinesh Chandimal, 6-122 (34.4) Sadeera Samarawickrama, 7-133 (36.3) Dhananjaya de Silva, 8-136 (38.6) Prabath Jayasuriya, 9-163 (46.2) Asitha Fernando , 10-166 (48.4) Ramesh Mendis, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 11 | 1 | 44 | 1 | 4.00 | |
Naseem Shah | 14 | 3 | 41 | 3 | 2.93 | |
Abrar Ahmed | 20.4 | 2 | 69 | 4 | 3.38 | |
Nauman Ali | 3 | 1 | 10 | 0 | 3.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | c Dilshan Madushanka b Prabath Jayasuriya | 201 | 326 | 19 | 4 | 61.66 |
Imam-ul-Haq | c Nishan Madushka b Asitha Fernando | 6 | 6 | 1 | 0 | 100.00 |
Shan Masood | c Kusal Mendis b Asitha Fernando | 51 | 47 | 4 | 1 | 108.51 |
Babar Azam | lbw b Prabath Jayasuriya | 39 | 75 | 4 | 1 | 52.00 |
Saud Shakeel | lbw b Asitha Fernando | 57 | 110 | 6 | 0 | 51.82 |
Sarfaraz Ahmed | -select- b | 14 | 22 | 3 | 0 | 63.64 |
Agha Salman | not out | 132 | 154 | 15 | 1 | 85.71 |
Mohammad Rizwan | not out | 50 | 67 | 4 | 1 | 74.63 |
Extras | 26 (b 4 , lb 16 , nb 3, w 3, pen 0) |
Total | 576/5 (134 Overs, RR: 4.3) |
Fall of Wickets | 1-13 (2.3) Imam-ul-Haq, 2-121 (21.5) Shan Masood, 3-210 (47.5) Babar Azam, 4-319 (80.3) Saud Shakeel, 5-468 (113.2) Abdullah Shafique, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 25 | 1 | 133 | 3 | 5.32 | |
Dilshan Madushanka | 17 | 3 | 77 | 0 | 4.53 | |
Ramesh Mendis | 36 | 2 | 139 | 0 | 3.86 | |
Prabath Jayasuriya | 53 | 11 | 194 | 2 | 3.66 | |
Dhananjaya de Silva | 3 | 1 | 13 | 0 | 4.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | b Noman Ali | 33 | 72 | 4 | 1 | 45.83 |
Dimuth Karunaratne | c Imam-ul-Haq b Noman Ali | 41 | 61 | 6 | 0 | 67.21 |
Kusal Mendis | c Saud Shakeel b Noman Ali | 14 | 35 | 2 | 0 | 40.00 |
Angelo Mathews | not out | 63 | 127 | 7 | 2 | 49.61 |
Dinesh Chandimal | c Imam-ul-Haq b Noman Ali | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Dhananjaya de Silva | c Abrar Ahmed b Noman Ali | 10 | 38 | 2 | 0 | 26.32 |
Sadeera Samarawickrama | c Shan Masood b Noman Ali | 5 | 11 | 1 | 0 | 45.45 |
Ramesh Mendis | st Mohammad Rizwan b Noman Ali | 16 | 42 | 2 | 0 | 38.10 |
Prabath Jayasuriya | b Naseem Shah | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | b | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Dilshan Madushanka | b | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 5 (b 0 , lb 4 , nb 0, w 1, pen 0) |
Total | 188/10 (67.4 Overs, RR: 2.78) |
Fall of Wickets | 1-69 (18.1) Nishan Madushka, 2-86 (26.2) Dimuth Karunaratne, 3-99 (30.2) Kusal Mendis, 4-109 (32.5) Dinesh Chandimal, 5-131 (46.2) Dhananjaya de Silva, 6-141 (50.1) Sadeera Samarawickrama, 7-177 (64.3) Ramesh Mendis, 8-184 (65.5) Prabath Jayasuriya, 9-188 (67.1) Asitha Fernando , 10-188 (67.4) Dilshan Madushanka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 12 | 5 | 30 | 0 | 2.50 | |
Naseem Shah | 17.4 | 5 | 44 | 3 | 2.53 | |
Abrar Ahmed | 10 | 1 | 34 | 0 | 3.40 | |
Noman Ali | 23 | 8 | 70 | 7 | 3.04 | |
Agha Salman | 5 | 1 | 6 | 0 | 1.20 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<