Home Tamil ஓமான் A அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் அரையிறுதியில் இலங்கை

ஓமான் A அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் அரையிறுதியில் இலங்கை

Emerging team Asia Cup 2023

2165
Emerging team Asia Cup 2023
Sri Lanka A win during the ACC Men's Emerging Teams Asia Cup 2023 cricket match between Sri Lanka A and Oman A at the R. Premadasa International Cricket Stadium, Colombo, Sri Lanka on July 18, 2023. Photo by: Deepak Malik / Creimas / Asian Cricket Council

ஓமான் A அணிக்கு எதிரான வளர்ந்துவரும் ஆசியக்கிண்ணத் தொடரின் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இலங்கை A அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கட்டாய வெற்றியை நோக்கிய இந்தப் போட்டியில் ஓமான் அணியை வெறும் 42 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை போட்டியை தம்வசப்படுத்தியது.

>>சௌத் சக்கீலின் கன்னி இரட்டைச்சதத்தோடு பலம் பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படி களமிறங்கிய இலங்கை A அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் சராசரியான ஆரம்பம் ஒன்றை கொடுத்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ சற்று தடுமாறி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிறந்த முறையில் ஆடிய குரூஸ்புள்ளே 42 ஓட்டங்களை பெற்றவேளை விக்கெட்டினை பறிகொடுத்தார். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் பசிந்து சூரியபண்டார மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் போட்டியில் சதம் கடந்த மினோத் பானுக 9 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.

பசிந்து சூரியபண்டார அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சஹான் ஆராச்சிகே 48 ஓட்டங்களுடன் அரைச்சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். இவர்களின் பிரகாசிப்பை தொடர்ந்து அணித்தலைவர் துனித் வெல்லாலகே (21 ஓட்டங்கள்) மற்றும் சாமிக்க கருணாரத்ன (20 ஓட்டங்கள்) ஓரளவு துடுப்பாட்டத்தில் பங்களிப்பு செய்ய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஓமான் அணித்தலைவர் ஆகிப் இலையாஷ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் இந்த ஆடுகளம் சற்று மந்தமாக இருந்தமையால் இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு ஓமான் அணிக்கு சவாலாக இருந்தது. எனினும் ஆப்கானிஸ்தான் அணியை பங்களாதேஷ் அணி இன்றை தினம் (18) வீழ்த்தியதால் தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பதற்கு இலங்கை அணிக்கு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது.

அதனை கருத்திற்கொண்டு ஆடிய இலங்கை அணிக்கு பந்துவீச்சாளர்கள் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். துனித் வெல்லாலகே அணித்தலைவராக முதல் ஓவரை வீசி விக்கெட்டினை கைப்பற்ற, தொடர்ச்சியாக ஏனைய பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை கைப்பற்ற தொடங்கினர்.

>>WATCH – உலகக் கிண்ண தகுதிகாண் சவாலை கடந்த இலங்கை | Cricket Galatta Epi 70

தடுமாற்றமடைந்த ஓமான் அணி தங்களுடைய முதல் 5 விக்கெட்டுகளை 20 ஓட்டங்களுக்குள் இழந்ததுடன், அடுத்த 5 விக்கெட்டுகளும் 22 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. எனவே வெறும் 17.1 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு ஓமான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்த, துனித் வெல்லாலகே, லஹிரு சமரகோன், பிரமோத் மதுசான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சஹான் ஆராச்சிகே ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இலங்கை அணியானது இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் 1.693 என்ற ஓட்ட சராசரியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது. எனினும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று பலமான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Result


Sri Lanka A Team
259/8 (50)

Oman A
42/10 (17.1)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando b Ayaan Khan 25 38 3 0 65.79
Lasith Croospulle c Shoaib Khan b Ayaan Khan 43 49 7 1 87.76
Minod Bhanuka st Suraj Kumar b Jay Odedra 9 20 0 0 45.00
Pasindu Sooriyabandara b Aqib Ilyas 60 75 5 0 80.00
Sahan Arachchige st Suraj Kumar b Aqib Ilyas 48 63 1 0 76.19
Lahiru Samarakoon b Jay Odedra 1 5 0 0 20.00
Ashen Bandara c Kashyap Prajapati b Aqib Ilyas 11 10 1 0 110.00
Dunith Wellalage not out 21 22 1 0 95.45
Chamika Karunarathne c Jay Odedra b Aqib Ilyas 20 14 0 2 142.86
Dushan Hemantha not out 5 4 0 0 125.00


Extras 16 (b 1 , lb 7 , nb 0, w 8, pen 0)
Total 259/8 (50 Overs, RR: 5.18)
Bowling O M R W Econ
Kaleemullah 6 0 28 0 4.67
Wasim Ali 10 0 52 0 5.20
Ayaan Khan 10 0 39 2 3.90
Jay Odedra 9 0 44 2 4.89
Samay Shrivastava 5 0 30 0 6.00
Aqib Ilyas 10 0 58 4 5.80


Batsmen R B 4s 6s SR
Kashyap Prajapati c Minod Bhanuka b Lahiru Samarakoon 18 25 2 0 72.00
Jatinder Singh b Dunith Wellalage 0 2 0 0 0.00
Aqib Ilyas c Minod Bhanuka b Pramod Madushan 1 5 0 0 20.00
Ayaan Khan c Lasith Croospulle b Pramod Madushan 1 13 0 0 7.69
Shoaib Khan b Lahiru Samarakoon 0 1 0 0 0.00
Wasim Ali c Dunith Wellalage b Sahan Arachchige 6 19 1 0 31.58
Suraj Kumar c Minod Bhanuka b Chamika Karunarathne 10 20 1 0 50.00
Rafiullah c Sahan Arachchige b Chamika Karunarathne 2 6 0 0 33.33
Samay Shrivastava lbw b Chamika Karunarathne 0 2 0 0 0.00
Jay Odedra not out 2 6 0 0 33.33
Kaleemullah lbw b Dunith Wellalage 1 4 0 0 25.00


Extras 1 (b 0 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 42/10 (17.1 Overs, RR: 2.45)
Bowling O M R W Econ
Dunith Wellalage 3.1 0 10 2 3.23
Pramod Madushan 5 2 6 2 1.20
Lahiru Samarakoon 5 0 21 2 4.20
Sahan Arachchige 2 1 2 1 1.00
Chamika Karunarathne 2 0 3 3 1.50



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<