நெதர்லாந்து கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் 10ஆவது அணியாக மாறியிருக்கின்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சவால் எப்படி இருக்கும்?
நெதர்லாந்து – ஸ்கொட்லாந்து அணிகள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் சுபர் சிக்ஸ் சுற்றுக்காக மோதிய போட்டி இன்று (06) நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் நெதர்லாந்து அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றே உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்ற 10ஆவது அணியாக மாறியிருக்கின்றது.
உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரிலிருந்து ஜிம்பாப்வே வெளியாகிய பின்னர் குறித்த தொடரில் இலங்கையை அடுத்து ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பு ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு காணப்பட்டிருந்தது.
அந்தவகையில் நெதர்லாந்து – ஸ்கொட்லாந்து போட்டியில் ஸ்கொட்லாந்து அணி வெற்றி பெற்றால் அவ்வணிக்கு நேரடியாக உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், நெதர்லாந்து அணி உலகக் கிண்ண வாய்ப்பிற்கு நல்ல நிகர் ஓட்ட விகிதத்துடன் (NRR) ஸ்கொட்லாந்தை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து பிரண்டன் மெக்குலனின் (106) சதத்தோடு 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்தது. பின்னர் சிறந்த ஓட்ட நிகர் விகிதத்துக்காக போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 278 ஓட்டங்களை 44 ஓவர்களில் அடையும் போது நெதர்லாந்துக்கு உலகக் கிண்ண வாய்ப்பு எனக் குறிப்பிடப்பட்டது.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கை ஏற்கனவே இப்போட்டியில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த பாஸ் டி லீடே இன் அபார சதத்துடன் நெதர்லாந்து கிரிக்கெட் அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களுடன் அடைந்தது. முன்னர் குறிப்பிட்டதன் அடிப்படையில் நெதர்லாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கை 44 ஓவர்களுக்குள் அடைந்ததோடு உலகக் கிண்ண வாய்ப்பினையும் உறுதி செய்து கொண்டது. நெதர்லாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்த பாஸ் டி லீடே 92 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் அவர் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.
மறுமுனையில் இப்போட்டியில் தோல்வியடைந்த ஸ்கொட்லாந்து தெநர்லாந்து அணிக்கு சமமாக சுபர் சிக்ஸ் சுற்றில் புள்ளிகளைப் பெற்ற போதும் சிறந்த நிகர ஓட்டவித்தியாசத்தினை கொண்டிருக்காத காரணத்தினால் உலகக் கிண்ண வாய்ப்பினை தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இப்போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) இலங்கையினை எதிர்கொள்கின்றது.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் (சுபர் சிக்ஸ்) புள்ளிப்பட்டியல்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<