சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்

Bangladesh Cricket

270

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் உபாதைக்கு பின்னர் அணிக்கு திரும்பி நேற்று புதன்கிழமை (05) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

IPL தொடரில் பிரகாசித்த வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

மழைக்காரணமாக இந்தப் போட்டியில் தடை ஏற்பட்டிருந்த போதும் ஆப்கானிஸ்தான் அணி டக்வர்த் லூவிஸ் (DLS) முறைப்படி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் தமிம் இக்பால் 13 ஓட்டங்களை பெற்று பஷல்லாஹ்க் பரூகியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். தொடர்ந்து உபாதைகளை சந்தித்துவந்த இவர், இந்தப் போட்டியிலும் சிறிய உபாதை ஒன்றுடன் விளையாடியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த இந்தப் போட்டியின் தோல்வியை அடுத்து இன்று தன்னுடைய ஓய்வு அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். தமிம் இக்பால் கடந்த ஆண்டு T20i போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்துடன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

தமிம் இக்பால் 2007ம் ஆண்டு ஒருநாள் போட்டிகள் அறிமுகத்தை பெற்றிருந்ததுடன் இதுவரையில் 241 போட்டிகளில் விளையாடி 8313 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5134 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

ஐசிசி உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், தமிம் இக்பால் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பங்களாதேஷ் T20i அணியை சகீப் அல் ஹஸன் வழிநடத்துவதுடன், டெஸ்ட் அணியின் தலைவராக லிடன் டாஸ் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<