Home Tamil மற்றுமொரு இலகு வெற்றியுடன் சுபர் 6 சுற்றுக்கு செல்லும் இலங்கை

மற்றுமொரு இலகு வெற்றியுடன் சுபர் 6 சுற்றுக்கு செல்லும் இலங்கை

232
ICC Cricket World Cup Qualifier 2023

ஸ்கொட்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடர் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை இலங்கை 82 ஓட்டங்களால் வீழ்த்தியிக்கின்றது. 

மேலும் இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் தம்முடைய நான்காவது வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி நான்கு வெற்றிகளுடன் தொடரின் சுபர் 6 சுற்றுக்கு முன்னேறுகின்றது.

>> உலகக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது<<

முன்னதாக ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை  வீரர்களுக்கு வழங்கியது. இப்போட்டிக்கான இலங்கை குழாம் மாற்றங்களின்றி களமிறங்க, ஸ்கொட்லாந்து இரண்டு மாற்றங்களுடன் இலங்கையை எதிர் கொண்டது.

இலங்கை அணி

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார

ஸ்கொட்லாந்து அணி

கிறிஸ்டோபர் மெக்பிரைட், மெதிவ் குரோஸ், பிரண்டன் மெக்குல்லன், ரிச்சி பெர்ரிங்டன் (தலைவர்), தோமஸ் மெகின்டாஸ், மைக்கல் லீஸ்க், மார்க் வாட், கிறிஸ் சோலே, ஜேக் ஜார்விஸ், அல்ஸ்டைர் ஈவான்ஸ், கிறிஸ் கீரிவ்ஸ்

தொடர்ந்து குழு B இல் தோல்வியடையாத அணிகளாக ஸ்கொட்லாந்து – இலங்கை அணிகள் போட்டியை ஆரம்பித்ததோடு, போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப வீரர்களாக பெதும் நிஸ்ஸங்க மற்றும் திமுத் கருணாரட்ன ஆகியோர் களம் வந்தனர். இந்த வீரர்கள் சிறந்த துவக்கம் ஒன்றை பெற்ற போதும் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக திமுத் கருணாரட்ன கிறிஸ் சோலேவின் பந்துவீச்சில் தான் 7 ஓட்டங்களை பெற்ற நிலையில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

சோலேவின் பின்னர் புதிய வீரராக வந்த குசல் மெண்டிஸ் வெறும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் மூன்றாம் விக்கெட்டுக்காக 54 ஓட்டங்களை சதீர சமரவிக்ரம – பெதும் நிஸ்ஸங்க ஜோடி இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, இந்த இணைப்பாட்டம் சதீர சமரவிக்ரமவின் விக்கெட்டினை அடுத்து நிறைவடைந்தது. சதீர சமரவிக்ரம 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் இந்த இணைப்பாட்டத்திற்குள் தன்னுடைய 9ஆவது ஒருநாள் அரைச்சதத்தினை பெதும் நிஸ்ஸங்க பூர்த்தி செய்திருந்தார்.

தொடர்ந்து இலங்கையின் நான்காவது விக்கெட்டுக்காக சரித் அசலன்கவுடன் இணைந்து நல்ல இணைப்பாட்டம் (44) ஒன்றுக்கு பெதும் நிஸ்ஸங்க அடித்தளமிட்ட நிலையில் தனது விக்கெட்டினை அவர் 85 பந்துகளுக்கு 10 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்தார்.

பெதும் நிஸ்ஸங்கவின் பின்னர் அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக சரித் அசலன்க அரைச்சதம் விளாசி தனன்ஞய டி சில்வாவுடன் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியினை கட்டியெழுப்பிய நிலையில் கீரின் கீரிவ்ஸ் தனது மாய சுழல் மூலம் இந்த இணைப்பாட்டத்தினை தகர்த்தார். இலங்கை அணியின் ஐந்தாவது விக்கெட்டாக ஆட்டமிழந்த தனன்ஞய டி சில்வா 02 பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் சரிவில் சிக்கிக் கொண்ட இலங்கை அணி குறித்த சரிவில் இருந்து மீளாத நிலையில் தமது இறுதி ஐந்து விக்கெட்டுக்களையும் 42 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களையே எடுத்தது. இந்த விக்கெட்டுக்களில் இலங்கை அணியின் மத்திய வரிசையில் வந்த அணித்தலைவர் தசுன் ஷானக்க ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழக்க, வனிந்து ஹஸரங்க 2 பௌண்டரிகள் உடன் 15 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்திருந்தார்.

>> ஒருநாள் அரங்கில் திமுத், வனிந்து நிகழ்த்திய சாதனைத் துளிகள்<<

இதேநேரம் இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் 8ஆவது ஒருநாள் அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த சரித் அசலன்க 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த மகீஷ் தீக்ஷன 16 ஓட்டங்கள் பெற்றார்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் மார்க் வாட் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கிறிஸ் சோலே 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 246 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே தடுமாறியதோடு இறுதியில் 29 ஓவர்கள் நிறைவில் 169 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை அவ்வணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ் கீரிவ்ஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார். இது அவரின் இரண்டாவது ஒருநாள் அரைச்சதமாக மாற, இம்முறை உலகக் கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரில் வீரர் ஒருவர் இலங்கை அணிக்கு எதிராக பெற்ற முதல் அரைச்சதமாகவும் காணப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக மகீஷ் தீக்ஷன தெரிவாகினார். இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் அடுத்ததாக சுபர் 6 சுற்றுத் தொடரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) நெதர்லாந்து அணியினை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Scotland
163/10 (29)

Sri Lanka
245/10 (49.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tomas Mackintosh, b Mark Watt 75 85 10 0 88.24
Dimuth Karunaratne b Chris Sole 7 9 1 0 77.78
Kusal Mendis c Michael Leask b Chris Sole 1 16 0 0 6.25
Sadeera Samarawickrama c Michael Leask b Alasdair Evans 26 35 4 0 74.29
Charith Asalanka c Matthew Cross b Mark Watt 63 65 4 2 96.92
Dhananjaya de Silva b Chris Greaves 23 31 2 0 74.19
Dasun Shanaka c Chris Sole b Chris Greaves 0 1 0 0 0.00
Wanindu Hasaranga c Chris Sole b Chris Greaves 15 12 2 0 125.00
Mahesh Theekshana not out 16 21 1 0 76.19
Kasun Rajitha lbw b Mark Watt 1 6 0 0 16.67
Lahiru Kumara c & b 5 17 0 0 29.41


Extras 13 (b 0 , lb 3 , nb 1, w 9, pen 0)
Total 245/10 (49.3 Overs, RR: 4.95)
Fall of Wickets 1-34 (4.2) Dimuth Karunaratne, 2-43 (8.4) Kusal Mendis, 3-98 (19.2) Sadeera Samarawickrama, 4-142 (28.2) Pathum Nissanka, 5-203 (39.2) Dhananjaya de Silva, 6-203 (39.3) Dasun Shanaka, 7-207 (40.4) Charith Asalanka, 8-223 (43.1) Wanindu Hasaranga, 9-228 (44.4) Kasun Rajitha, 10-245 (49.3) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Chris Sole 10 1 46 2 4.60
Brandon McMullen 5 0 19 0 3.80
Jack Jarvis 3 0 15 0 5.00
Alasdair Evans 7 0 35 1 5.00
Christopher McBride 2 0 13 0 6.50
Mark Watt 10 0 52 3 5.20
Michael Leask 6 0 30 0 5.00
Chris Greaves 6.3 0 32 4 5.08


Batsmen R B 4s 6s SR
Christopher McBride c Dasun Shanaka b Wanindu Hasaranga 29 38 2 1 76.32
Matthew Cross b Lahiru Kumara 7 4 1 0 175.00
Brandon McMullen b Mahesh Theekshana 5 11 1 0 45.45
Richie Berrington c Dhananjaya de Silva b Mahesh Theekshana 10 20 2 0 50.00
Tomas Mackintosh, lbw b Kasun Rajitha 3 8 0 0 37.50
Michael Leask lbw b Dasun Shanaka 5 12 1 0 41.67
Chris Greaves not out 56 41 7 2 136.59
Mark Watt lbw b Wanindu Hasaranga 14 17 2 0 82.35
Jack Jarvis lbw b Mahesh Theekshana 0 2 0 0 0.00
Chris Sole run out (Lahiru Kumara) 17 21 2 0 80.95
Alasdair Evans run out (Kusal Mendis) 0 0 0 0 0.00


Extras 17 (b 0 , lb 7 , nb 0, w 10, pen 0)
Total 163/10 (29 Overs, RR: 5.62)
Fall of Wickets 1-14 (1.4) Matthew Cross, 2-38 (6.2) Brandon McMullen, 3-55 (10.2) Richie Berrington, 4-60 (11.6) Tomas Mackintosh,, 5-73 (14.3) Christopher McBride, 6-74 (15.6) Michael Leask, 7-99 (20.5) Mark Watt, 8-100 (21.2) Jack Jarvis, 9-155 (28.3) Chris Sole, 10-163 (28.6) Alasdair Evans,

Bowling O M R W Econ
Kasun Rajitha 5 0 25 1 5.00
Lahiru Kumara 5 0 30 1 6.00
Mahesh Theekshana 10 0 41 3 4.10
Wanindu Hasaranga 6 0 42 2 7.00
Dasun Shanaka 1 1 0 1 0.00
Dhananjaya de Silva 2 0 18 0 9.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<