Home Tamil உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் உலக சாதனை படைத்த வனிந்து ஹஸரங்க

உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் உலக சாதனை படைத்த வனிந்து ஹஸரங்க

487

ICC இன் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் இலங்கை 133 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியோடு உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இலங்கை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் ”சுபர் 6” சுற்றுக்கு தெரிவாகுவதோடு, இலங்கையுடன் இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய அயர்லாந்து மூன்று தொடர் தோல்விகளுடன் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரிலிருந்து வெளியேறுகின்றது.

>>அயர்லாந்து எதிராக வெற்றி ஓட்டத்தை தொடருமா இலங்கை அணி?

இலங்கை, அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டி முன்னதாக ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் அன்ட்ரூ பல்பைனி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி மாற்றங்களின்றி முன்னைய போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்க அயர்லாந்து இப்போட்டியில் பென் வைட்டிற்கு காயம் காரணமாக ஓய்வு வழங்கி, பெர்ரி மெக்கார்த்தியிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

இலங்கை அணி 

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார

அயர்லாந்து அணி

என்டி மெக்பிரைன், போல் ஸ்டேர்லிங், அன்டி பல்பைனி (தலைவர்), ஹர்ரி டெக்டர், லோர்கன் டக்கர், கேர்டிஸ் கேம்பர், ஜோர்ஜ் டொக்ரல், கரேத் டெலானி, மார்க் அடையர், ஜோசுவா லிட்டில், பெர்ரி மெக்கார்த்தி

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக பெதும் நிஸ்ஸங்க மற்றும் திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் களம் வந்தனர். இந்த வீரர்கள் இருவரும் 48 ஓட்டங்களை முதல் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பெதும் நிஸ்ஸங்க 20 ஓட்டங்களை பெற்ற நிலையில் பெர்ரி மெக்கார்த்தியிடம் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

இதனையடுத்து புதிய வீரராக வந்த குசல் மெண்டிஸ் இன் விக்கெட்டும் அடுத்த பந்தில் அவர் ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் மெக்கார்த்தி மூலம் கைப்பற்றப்பட்டது.

எனினும் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த திமுத் கருணாரட்ன மற்றும் சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் இணைப்பாட்டமாக அபாரமான முறையில் 168 ஓட்டங்களை பெற்றனர்.

தொடர்ந்து மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டத்தின் நிறைவாக ஆட்டமிழந்த சதீர சமரவிக்ரம 86 பந்துகளில் 04 பெளண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இந்த இணைப்பாட்டத்தின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய கன்னி சதத்தினை திமுத் கருணாரட்ன பூர்த்தி செய்தார். அந்த சத உதவியுடன் இலங்கை அணியானது வலுவான நிலையை அடைந்து கொண்டது. பின்னர் திமுத் கருணாரட்ன தனது விக்கெட்டினை மார்க் அடையர் இன் பந்துவீச்சில் பறிகொடுத்தார். திமுத் கருணாரட்ன 103 பந்துகளில் 8 பெளண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது திமுத் கருணாரட்ன ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 5ஆவது தடவை 50 ஓட்டங்களை கடந்த சந்தர்ப்பமாகவும் மாறியது.

இதன் பின்னர் இலங்கை அணி மத்திய வரிசையில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த போதும் சரித் அசலன்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் வெளிப்படுத்திய பெறுமதியான ஆட்டங்களோடு இலங்கை அணியினர் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை எடுத்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த தனன்ஞய டி சில்வா 35 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 42 ஓட்டங்கள் எடுக்க, சரித் அசலன்க 30 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தார்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் மார்க் அடையர் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, பெர்ரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மே.தீவுகள் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 326 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து கிரிக்கெட் அணியானது ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியதோடு பின்னர் 31 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் 133 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த வனிந்து ஹஸரங்க ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் சுழல்பந்துவீச்சாளர் என்கிற உலக சாதனையையும் நிலை நாட்டியிருந்தார். இதேநேரம் மகீஷ் தீக்ஷனவும் 2 விக்கெட்டுக்களுடன் இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

அயர்லாந்தின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக கேர்டிஸ் கேம்பர் 39 ஓட்டங்களை பெற்றிருந்தும் அவரது ஆட்டம் வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணிக்காக இப்போட்டியில் சதம் விளாசிய திமுத் கருணாரட்ன தெரிவாகினார். இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அடுத்ததாக ஸ்கொட்லாந்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) மோதுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Ireland
192/10 (31)

Sri Lanka
325/10 (49.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Gareth Delany b Barry McCarthy 20 26 4 0 76.92
Dimuth Karunaratne b Mark Adair 103 103 8 0 100.00
Kusal Mendis lbw b Barry McCarthy 0 1 0 0 0.00
Sadeera Samarawickrama c Harry Tector b Gareth Delany 82 86 4 0 95.35
Charith Asalanka c Curtis Campher b Gareth Delany 38 30 1 2 126.67
Dhananjaya de Silva not out 42 35 4 1 120.00
Dasun Shanaka c George Dockrell b Barry McCarthy 5 7 0 0 71.43
Wanindu Hasaranga c Josh Little b Mark Adair 4 5 0 0 80.00
Mahesh Theekshana c Lorcan Tucker b Mark Adair 0 2 0 0 0.00
Lahiru Kumara c & b Mark Adair 4 4 1 0 100.00
Kasun Rajitha run out (Paul Stirling) 0 1 0 0 0.00


Extras 27 (b 3 , lb 2 , nb 1, w 21, pen 0)
Total 325/10 (49.5 Overs, RR: 6.52)
Fall of Wickets 1-48 (8.3) Pathum Nissanka, 2-48 (8.4) Kusal Mendis, 3-216 (35.1) Sadeera Samarawickrama, 4-235 (37.3) Dimuth Karunaratne, 5-281 (44.1) Charith Asalanka, 6-299 (46.1) Dasun Shanaka, 7-304 (47.1) Wanindu Hasaranga, 8-304 (47.3) Mahesh Theekshana, 9-325 (49.4) Lahiru Kumara, 10-325 (49.5) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Josh Little 8 0 78 0 9.75
Mark Adair 9.5 1 46 4 4.84
Barry McCarthy 9 1 56 3 6.22
Andy McBrine 6 0 36 0 6.00
Curtis Campher 3 0 19 0 6.33
George Dockrell 4 0 33 0 8.25
Gareth Delany 10 0 52 2 5.20


Batsmen R B 4s 6s SR
Andy McBrine c Lahiru Kumara b Kasun Rajitha 17 21 3 0 80.95
Paul Stirling c Kusal Mendis b Lahiru Kumara 6 11 1 0 54.55
Andy Balbirnie lbw b Wanindu Hasaranga 12 13 2 0 92.31
Harry Tector lbw b Wanindu Hasaranga 33 35 3 1 94.29
Lorcan Tucker b Dasun Shanaka 0 5 0 0 0.00
Curtis Campher c Kusal Mendis b Mahesh Theekshana 39 31 4 1 125.81
George Dockrell not out 26 34 1 0 76.47
Gareth Delany b Wanindu Hasaranga 19 8 2 1 237.50
Mark Adair c Dasun Shanaka b Wanindu Hasaranga 4 2 1 0 200.00
Barry McCarthy c Lahiru Kumara b Mahesh Theekshana 5 12 0 0 41.67
Josh Little c & b Wanindu Hasaranga 20 14 2 1 142.86


Extras 11 (b 4 , lb 4 , nb 0, w 3, pen 0)
Total 192/10 (31 Overs, RR: 6.19)
Fall of Wickets 1-21 (3.4) Paul Stirling, 2-39 (6.2) Andy McBrine, 3-57 (10.3) Andy Balbirnie, 4-58 (11.3) Lorcan Tucker, 5-116 (19.6) Curtis Campher, 6-141 (22.3) Gareth Delany, 7-145 (22.5) Mark Adair, 8-162 (27.4) Barry McCarthy, 9-192 (30.6) Josh Little, 10-86 (161) Harry Tector,

Bowling O M R W Econ
Kasun Rajitha 5 1 22 1 4.40
Lahiru Kumara 5 0 33 1 6.60
Dasun Shanaka 5 0 21 1 4.20
Wanindu Hasaranga 10 0 79 5 7.90
Mahesh Theekshana 6 0 29 2 4.83



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<