இந்திய பகிரங்க கராத்தேயில் கிளிநொச்சி மாணவி சனுஜா சாதனை

215

இந்திய கராத்தே சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய பகிரங்க சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பில் பங்குகொண்ட கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி டி சனுஜா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆறாவது இந்திய பகிரங்க சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் தொடர் இந்தியாவின் புதுடெல்லியில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த கராத்தே அணிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் இம்முறை போட்டித் தொடரில் பங்குகொண்டன.

இந்த நிலையில், இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.

சவாட் சர்வதேச குத்துச்சண்டையில் வடக்கின் டிலக்சினிக்கு தங்கம்

அதேபோல, குறித்த தொடரில் பெண்களுக்கான கனிஷ்ட பிரிவு கராத்தேயில் பங்குகொண்ட கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி
டி சனுஜா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இம்முறை போட்டித் தொடரில் இலங்கை கராத்தே அணியின் முகாமையாளராக சென்செய்.கீர்த்தி பஸ்நாயக்கவும், அணியின் பயிற்சியாளராக ZA.ரவூபும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<