இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டியில், இலங்கை 175 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதுடன், ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றது.
>>LPL போட்டி அட்டவணை வெளியீடு; இரு மைதானங்கள் தெரிவு<<
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டி இன்று (19) ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி வீரர்கள் முதலில் இலங்கையினை துடுப்பாடப் பணித்திருந்தனர். இப்போட்டிக்கான இலங்கை அணி அனுபவ வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவிற்கு ஓய்வு வழங்கிய நிலையில், கசுன் ராஜிதவிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
இலங்கை குழாம்
பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார
ஐக்கிய அரபு இராச்சியம்
முஹம்மட் வஸீம் (தலைவர்), ரோஹான் முஸ்தபா, விரித்யா அரவிந்த், பாசில் ஹமீட், ஆசிப் கான், ரமீஸ் சஹ்சாத், அலி நஸீர், ஆயன் அப்சல் கான், கார்திக் மெய்யப்பன், ஸஹூர் கான், முஹம்மட் ஜவாத்துல்லாஹ்
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களான பெதும் நிஸ்ஸங்க மற்றும் திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் அரைச்சதங்களை விளாசி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர். இதில் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய மூன்றாவது தொடர் அரைச்சதத்தினை விளாசியிருந்த திமுத் கருணாரட்ன இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு ஆட்டமிழக்கும் சந்தர்ப்பத்தில் 54 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இதேநேரம் சிறந்த அடித்தளம் ஒன்றினை வழங்கிய பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 8ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 76 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
>>விராட் கோலியே முதலில் சண்டையை ஆரம்பித்தார் – மனம் திறந்த நவீன் உல் ஹக்<<
மறுமுனையில் புதிய துடுப்பாட்டவீரர்களாக களம் வந்த குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஜோடியும் பொறுப்பான முறையில் ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தது. இரண்டு வீரர்களும் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 105 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு குசல் மெண்டிஸ் அதிரடி கலந்த நிதானத்துடன் 63 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் சதீர சமரவிக்ரம தன்னுடைய இரண்டாவது ஒருநாள் அரைச்சதத்துடன் 64 பந்துகளில் 09 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் மத்திய வரிசையில் சிறிய சரிவு ஒன்றை இலங்கை சந்தித்த போதும் சரித் அசலன்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் இறுதிநேர அதிரடியோடு இலங்கை வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை அபாரமான முறையில் எடுத்தனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற சரித் அசலன்க 23 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் எடுக்க, வனிந்து ஹஸரங்க 12 பந்துகளில் 3 பௌண்டரிகள் உடன் 23 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பந்துவீச்சில் அலி நசீர் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால்மிக்க 356 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி நிதான ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும், பின்னர் வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சுக்கு தடுமாறத் தொடங்கியது.
அதன்படி 39 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஐக்கிய அரபு இராச்சிய அணி 180 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது. ஐக்கிய அரபு இராச்சிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் முஹம்மட் வஸீம் 39 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களில் ஒருவராக மாற, வனிந்து ஹஸரங்க இலங்கை பந்துவீச்சு சார்பில் வெறும் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சுடன் இலங்கையின் வெற்றியினையும் உறுதி செய்திருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹஸரங்க தெரிவாகினார். இலங்கை அணி உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் அடுத்ததாக ஓமானை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) எதிர்கொள்கின்றது.
போட்டியின் ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Basil Hameed | 57 | 76 | 5 | 0 | 75.00 |
Dimuth Karunaratne | lbw b Aayan Afzal Khan | 52 | 54 | 7 | 0 | 96.30 |
Kusal Mendis | c Ethan D’Souza b Ali Naseer | 78 | 63 | 10 | 0 | 123.81 |
Sadeera Samarawickrama | run out (Vriitya Aravind) | 73 | 64 | 9 | 0 | 114.06 |
Charith Asalanka | not out | 48 | 23 | 5 | 2 | 208.70 |
Dasun Shanaka | c Muhammad Jawadullah b Ali Naseer | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Dhananjaya de Silva | lbw b Rohan Mustafa | 5 | 5 | 0 | 0 | 100.00 |
Wanindu Hasaranga | not out | 23 | 12 | 3 | 0 | 191.67 |
Extras | 18 (b 5 , lb 8 , nb 0, w 5, pen 0) |
Total | 355/6 (50 Overs, RR: 7.1) |
Fall of Wickets | 1-95 (16.6) Dimuth Karunaratne, 2-138 (26.1) Pathum Nissanka, 3-243 (39.2) Kusal Mendis, 4-287 (44.3) Sadeera Samarawickrama, 5-292 (45.3) Dasun Shanaka, 6-297 (46.2) Dhananjaya de Silva, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Muhammad Jawadullah | 7 | 0 | 55 | 0 | 7.86 | |
Ali Naseer | 10 | 1 | 44 | 2 | 4.40 | |
Zahoor Khan | 8 | 0 | 72 | 0 | 9.00 | |
Rohan Mustafa | 7 | 0 | 55 | 1 | 7.86 | |
Aayan Afzal Khan | 10 | 0 | 52 | 1 | 5.20 | |
Karthik Meiyappan | 5 | 0 | 45 | 0 | 9.00 | |
Basil Hameed | 3 | 0 | 19 | 1 | 6.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Muhammad Waseem | c Charith Asalanka b Wanindu Hasaranga | 39 | 48 | 5 | 1 | 81.25 |
Rohan Mustafa | c & b Lahiru Kumara | 12 | 15 | 2 | 0 | 80.00 |
Vriitya Aravind | lbw b Dhananjaya de Silva | 39 | 55 | 3 | 0 | 70.91 |
Basil Hameed | lbw b Wanindu Hasaranga | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Asif Khan | lbw b Wanindu Hasaranga | 8 | 7 | 1 | 0 | 114.29 |
Rameez Shahzad | b Wanindu Hasaranga | 26 | 43 | 2 | 0 | 60.47 |
Ali Naseer | b Mahesh Theekshana | 34 | 32 | 3 | 1 | 106.25 |
Aayan Afzal Khan | b Wanindu Hasaranga | 5 | 17 | 0 | 0 | 29.41 |
Karthik Meiyappan | run out (Mahesh Theekshana) | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Zahoor Khan | not out | 6 | 11 | 0 | 0 | 54.55 |
Muhammad Jawadullah | b Wanindu Hasaranga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 0 , lb 5 , nb 0, w 6, pen 0) |
Total | 180/10 (39 Overs, RR: 4.62) |
Fall of Wickets | 1-36 (5.3) Rohan Mustafa, 2-82 (16.1) Muhammad Waseem, 3-82 (16.4) Basil Hameed, 4-94 (18.3) Asif Khan, 5-119 (24.2) Vriitya Aravind, 6-167 (32.6) Ali Naseer, 7-170 (34.1) Rameez Shahzad, 8-170 (34.3) Karthik Meiyappan, 9-180 (38.5) Aayan Afzal Khan, 10-180 (38.6) Muhammad Jawadullah, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 6 | 0 | 35 | 1 | 5.83 | |
Lahiru Kumara | 6 | 0 | 26 | 1 | 4.33 | |
Mahesh Theekshana | 10 | 0 | 43 | 0 | 4.30 | |
Dasun Shanaka | 5 | 0 | 22 | 0 | 4.40 | |
Wanindu Hasaranga | 8 | 1 | 24 | 6 | 3.00 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 25 | 1 | 6.25 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<