அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதுசங்க! ; LPL ஏலம் தொடர்பான முழு விபரம்!

1942
Lanka Premier League 2023

கொழும்பில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

டில்ஷான் மதுசங்க ஆரம்பக்கட்ட ஏலத்தில் அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்க்காத போதும், இறுதியாக தெரிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கான வாசிப்பின் போது 92 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 2 கோடி 94 இலட்சம்) ஜப்னா கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

>> தம்புள்ள ஓரா அணியுடன் இணையும் முன்னாள் ஆஸி. வேகப்புயல்!

கொழும்பு சங்ரி-லா நட்சத்திர ஹோட்டலில் புதன்கிழமை (14) நடைபெற்ற இந்த LPL வீரர்கள் ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என ஒட்டுமொத்தமாக 360 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதிலிருந்து 20 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 75 உள்நாட்டு வீரர்கள் என அணிகளுக்காக வாங்கப்பட்டனர்.

வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான கிரிஸ் லின் (ஜப்னா கிங்ஸ்), பென் கட்டிங் (கோல் டைட்டன்ஸ்) ஆகியோர் வாங்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் (கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்), இப்திகார் அஹமட் (கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்), மொஹமட் நவாஸ் (கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்), ஆசிப் அலி (பி-லவ் கண்டி) மற்றும் சொஹைப் மலிக் (ஜப்னா கிங்ஸ்) போன்ற முன்னணி வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் நியூசிலாந்து அணியின் டிம் செய்பர்ட் (கோல் டைட்டன்ஸ்), செட் போவ்ஸ் (கோல் டைட்டன்ஸ்), ஆப்கானிஸ்தான் அணியின் நூர் அஹமட் (தம்புள்ள ஓரா), தென்னாபிரிக்க அணியின் ஹார்டஸ் வில்ஜியோன் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு வீரர்களை பொருத்தவரை டில்ஷான் மதுசங்கவுக்கு அடுத்தப்படியாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலர்களுக்கு ஜப்னா கிங்ஸ் அணி வாங்கியதுடன், தனன்ஜய டி சில்வா 76,000 அமெரிக்க டொலர் (தம்புள்ள ஓரா), பினுர பெர்னாண்டோ 76,000 அமெரிக்க டொலர் (தம்புள்ள ஓரா) மற்றும் தினேஷ் சந்திமால் 72,000 அமெரிக்க டொலர் (பி-லவ் கண்டி) என அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.

இந்த வீரர்களுடன் இலங்கை கிரிக்கெட் அணியில் இடத்தை பிடிப்பதற்காக காத்திருக்கும் மற்றும் சில வாய்ப்புகளை பெற்றுக்கொண்ட உள்ளூர் வீரர்களுக்குமான கவனம் இந்த ஏலத்தை பொருத்தவரை அதிகமாக எழுந்திருந்தது.

குறிப்பாக தற்போது உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள சதீர சமரவிக்ரமவை 68,000 அமெரிக்க டொலர்களுக்கு தம்புள்ள ஓரா அணி வாங்கியிருந்தது. இவருடன் கமிந்து மெண்டிஸ் 68,000 அமெரிக்க டொலர் (பி-லவ் கண்டி), துனித் வெல்லாலகே 56,000 அமெரிக்க டொலர் (ஜப்னா கிங்ஸ்), லஹிரு சமரகோன் 40,000 அமெரிக்க டொலர் (கோல் டைட்டன்ஸ்) மற்றும் அஷேன் பண்டார 40,000 அமெரிக்க டொலர் (பி-லவ் கண்டி) என வளர்ந்துவரும் வீரர்களுக்கும் அதிக தொகை வழங்கப்பட்டிருந்தது.

தமிழ்பேசும் வீரர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு LPL தொடரில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை பெற்றிருந்த விஜயகாந்த வியாஸ்காந்த்தை 18,000 அமெரிக்க டொலர்களுக்கு ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும் வாங்கியிருந்ததுடன், தீசன் விதுசன் மற்றும் ரத்னராஜா தேனுரதன் ஆகியோரை அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 5000 அமெரிக்க டொலர்களுக்கு ஜப்னா கிங்ஸ் அணி வாங்கியது. அதேநேரம் கடந்த ஆண்டு LPL தொடரில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளாத வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் இம்முறை 5000 அமரிக்க டொலர்களுக்கு கோல் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட வீரர்களை தவிர்த்து இலங்கை அணியின் முன்னணி வீரர்களான பெதும் நிஸ்ஸங்க (கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் – 40,000), நிரோஷன் டிக்வெல்ல (கொழும்பு ஸ்டார்ஸ் – 40,000), லஹிரு குமார (கோல் டைட்டன்ஸ் – 40,000), கசுன் ராஜித (கோல் டைட்டன்ஸ் – 40,000), துஷ்மந்த சமீர (பி-லவ் கண்டி – 70,000) மற்றும் பிரமோத் மதுஷான் (தம்புள்ள ஓரா – 34,000) ஆகியோரும் அணிகளால் வாங்கப்பட்டிருந்தனர்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட LPL ஏலம் நிறைவுபெற்றுள்ள நிலையில், தொடர் அடுத்த மாதம் 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதிவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழாம்களின் முழு விபரம்

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் தம்புள்ள ஓரா ஜப்னா கிங்ஸ் பி-லவ் கண்டி கோல் டைட்டன்ஸ்
பாபர் அசாம் குசல் மெண்டிஸ் திசர

பெரேரா

வனிந்து

ஹஸரங்க

தசுன்

ஷானக

நசீம் ஷா அவிஷ்க பெர்னாண்டோ டேவிட்

மில்லர்

அஞ்செலோ

மெதிவ்ஸ்

பானுக

ராஜபக்ஷ

மதீஷ பதிரண லுங்கி

என்கிடி

ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் முஜீப் உர்

ரஹ்மான்

டெப்ரைஷ்

சம்ஷி

சாமிக்க கருணாரத்ன மெதிவ்

வேட்

மஹீஷ் தீக்ஷன பக்ஹர் ஸமான் சகீப் அல்

ஹஸன்

பெதும் நிஸ்ஸங்க தனன்ஜய டி சில்வா சொஹைப்

மலிக்

இசுரு

உதான

லஹிரு

குமார

நிரோஷன் டிக்வெல்ல குசல்

பெரேரா

துனித் வெல்லாலகே தினேஷ்

சந்திமால்

சீகுகே

பிரசன்ன

வஹாப் ரியாஸ் ஹெய்டன்

கெர்

சரித் அசலங்க மொஹமட்

ஹஸ்னைன்

லசித்

குரூஸ்புள்ளே

நிபுன் தனன்ஜய சதீர சமரவிக்ரம பெதும்

குமார

துஷ்மந்த

சமீர

சொஹான் டி லிவேரா
லக்ஷான் சந்தகன் பினுர

பெர்னாண்டோ

விஜயகாந்த்

வியாஸ்காந்த்

சஹான்

ஆராச்சிகே

அஷான்

பிரியன்ஜன

மொவின் சுபசிங்க நூர் அஹமட் தீசன்

விதுசன்

அஷேன்

பண்டார

பென்

கட்டிங்

லஹிரு

உதார

சஹனவாஸ்

தஹானி

அசங்க மனோஜ் மொஹமட் ஹரிஸ் மொஹமட் மிதுன்
எசான் மலிங்க சச்சித

ஜயதிலக்க

நிசான் மதுஷ்க நவோத்

பரணவிதான

மினோத் பானுக
சஷிக டுல்ஷான் ஜனித்

லியனகே

அசித பெர்னாண்டோ கமிந்து மெண்டிஸ் பசிந்து

சூரியபண்டார

நுவனிது பெர்னாண்டோ துஷான்

ஹேமந்த

நுவான் துஷார நுவான் பிரதீப் ஷெவோன் டேனியல்
இப்திகார் அஹமட் பிரமோத் மதுஷான் டில்ஷான் மதுசங்க சதுரங்க டி சில்வா மொஹமட்

சிராஸ்

லோர்கன்

டக்கர்

லக்ஷான் எதிரிசிங்க அஷேன் ரந்திக லஹிரு மதுசங்க லஹிரு சமரகோன்
ரமேஷ் மெண்டிஸ் ஜெஹான் டேனியல் ரத்னராஜா தேனுரதன் மல்ஷ தருபதி கசுன் ராஜித
அஹான் விக்ரமசிங்க வனுஜ சஹான் அசேல குணரத்ன தனுக

தாபரே

அகில தனன்ஜய
யசோதர லங்கா டிரவீன் மெதிவ் ஹார்டஸ் வில்ஜியோன் லசித் அபேரத்ன சொனால் தினூஷ
லோர்கன் டக்கர் மானெல்கர் டி சில்வா ஸமான் கான் அவிஷ்க தரிந்து அவிஷ்க பெரேரா
மொஹமட் நவாஸ் பிரவீன்

ஜயவிக்ரம

கிரிஸ் லின் ஆசிப் அலி விஷ்வ பெர்னாண்டோ
அஞ்செலோ பெரேரா கவிந்து பதிரண ஆமெர் ஜமால் அனுக் பெர்னாண்டோ
தனன்ஜய

லக்ஷான்

ரவிந்து பெர்னாண்டோ சாட் போவ்ஸ்
ஜெப்ரி வெண்டர்சே அலெக்ஸ்

ரொஸ்

டிம்

செய்பரட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<