Home Tamil தென்னாபிரிக்க A அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை A அணி

தென்னாபிரிக்க A அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை A அணி

South Africa A tour of Sri Lanka 2023

1189
South Africa A tour of Sri Lanka 2023

தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை A அணி நிசான் மதுஷ்கவின் சதம் மற்றும் டில்ஷான் மதுசங்கவின் 4 விக்கெட்டுகளின் உதவியுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் இலங்கை A அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், தொடரை சமப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் (06) களமிறங்கியது.

>> LPL தொடருக்கான தொழிநுட்ப குழு நியமனம்

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா A அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் பந்துவீச ஆரம்பித்த இலங்கை A அணிக்கு டில்ஷான் மதுசங்க அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். அபாரமாக பந்துவீசிய இவர் தென்னாபிரிக்க A அணியின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்ய 20 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தொடர்ந்து ஜனித் லியனகே, முதல் போட்டியில் 98 ஓட்டங்களை விளாசிய டெவால்ட் பிரேவிஸ் உட்பட 2 விக்கெட்டுகளையும், பிரமோத் மதுசான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்ற தென்னாபிரிக்க A அணி 42 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணியின் அபார பந்துவீச்சுக்கு தடுமாறிய தென்னாபிரிக்க அணிக்கு 8வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டிரிஷ்டன் ஸ்டப்ஷ் மற்றும் ஜெரால்ட் கோட்ஷி ஆகியோர் நேர்த்தியான இணைப்பாட்டமொன்றை வழங்க தொடங்கினர். இவர்கள் இருவரும் 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற ஸ்டப்ஷ் 59 ஓட்டங்களுடன் சஹான் ஆராச்சிகேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து 77 ஓட்டங்களை பெற்றிருந்த ஜெரால்ட் கோட்ஷி துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 43.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட டில்ஷான் மதுசங்க 4 விக்கெட்டுகளையும், ஜனித் லியனகே மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தென்னாபிரிக்க A அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு நிசான் மதுஷ்க வேகமான ஓட்டக்குவிப்புடன் ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவர் ஒரு பக்கம் வேகமாக இவர் ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் லசித் குரூஸ்புள்ளே (4), நுவனிது பெர்னாண்டோ (0) மற்றும் அணித்தலைவர் நிபுன் தனன்ஜய (8) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர்.

முதல் விக்கெட்டை 34 ஓட்டங்களுக்கு இழந்த இலங்கை அணி 74 ஓட்டங்களுக்கு தங்களுடைய 3 விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தது. எனினும் தனியாளாக ஓட்டங்களை குவித்த நிசான் மதுஷ்க அரைச்சதம் கடந்து வேகமாக வெற்றியிலக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

மறுமுனையில் நிசான் மதுஷ்கவுடன் ஜோடி சேர்ந்த சஹான் ஆராச்சிகே தனது பங்கிற்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தொடங்கினார். இவர்கள் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அற்புதமாக ஆடிய நிசான் மதுஷ்க 85 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களை பெற, சஹான் ஆராச்சிகே 55 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் செப்போ மொரிகி, லிஷாட் வில்லியம்ஸ் மற்றும் பெயர்ஸ் ஸ்வான்போல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்றைய வெற்றியின் மூலம் தொடரை 1-1 என இலங்கை A அணி சமனிலைப்படுத்தியுள்ளதுடன், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை (08) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Result


Sri Lanka A Team
178/3 (29)

South Africa A Team
175/10 (43.2)

Batsmen R B 4s 6s SR
Jordan Hermann lbw b Dilshan Madushanka 1 4 0 0 25.00
Matthew Breetzke b Dilshan Madushanka 14 26 2 0 53.85
Zubayr Hamza c Dunith Wellalage b Dilshan Madushanka 2 13 0 0 15.38
Kyle Verreynne c Nishan Madushka b Dilshan Madushanka 0 3 0 0 0.00
Tony de Zorzi c Nuwanidu Fernando b Sahan Arachchige 4 12 0 0 33.33
Tristan Stubbs st Nishan Madushka b Sahan Arachchige 59 88 1 3 67.05
Dewald Brevis b Janith Liyanage  2 5 0 0 40.00
Beyers Swanepoel b Pramod Madushan 7 11 1 0 63.64
Gerald Coetzee b Dunith Wellalage 77 89 6 2 86.52
Lizaad Williams c & b Sahan Arachchige 1 5 0 0 20.00
Tshepo Moreki not out 1 5 0 0 20.00


Extras 7 (b 0 , lb 3 , nb 1, w 3, pen 0)
Total 175/10 (43.2 Overs, RR: 4.04)
Fall of Wickets 1-3 (1.2) Jordan Hermann, 2-15 (5.3) Zubayr Hamza, 3-16 (5.6) Kyle Verreynne, 4-20 (9.2) Matthew Breetzke, 5-23 (10.1) Tony de Zorzi, 6-29 (12.4) Dewald Brevis, 7-42 (15.6) Beyers Swanepoel, 8-153 (38.5) Tristan Stubbs, 9-157 (40.2) Lizaad Williams, 10-175 (43.2) Gerald Coetzee,

Bowling O M R W Econ
Pramod Madushan 8 2 13 1 1.62
Dilshan Madushanka 9 1 33 4 3.67
Janith Liyanage  8 1 32 2 4.00
Dunith Wellalage 9.2 1 33 1 3.59
Lakshan Sandakan 6 0 43 0 7.17
Sahan Arachchige 3 0 18 2 6.00


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka not out 107 85 13 2 125.88
Lasith Croospulle b Lizaad Williams 4 6 0 0 66.67
Nuwanidu Fernando c Kyle Verreynne b Beyers Swanepoel 0 6 0 0 0.00
Nipun Dhananjaya c Beyers Swanepoel b Tshepo Moreki 8 22 1 0 36.36
Sahan Arachchige not out 50 55 6 0 90.91


Extras 9 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 5)
Total 178/3 (29 Overs, RR: 6.14)
Fall of Wickets 1-34 (3.1) Lasith Croospulle, 2-37 (4.3) Nuwanidu Fernando, 3-74 (12.1) Nipun Dhananjaya,

Bowling O M R W Econ
Beyers Swanepoel 5 0 29 1 5.80
Lizaad Williams 5 1 25 1 5.00
Tshepo Moreki 4 0 25 1 6.25
Dewald Brevis 9 0 49 0 5.44
Gerald Coetzee 5 0 34 0 6.80
Tony de Zorzi 1 0 10 0 10.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<