இலங்கை – ஆப்கான் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

Afghanistan tour of Sri Lanka 2023

643

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டியை காண டிக்கெட்டுகளை எவ்வாறு கொள்வனவு செய்யலாம் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, வெள்ளிக்கிழமை (26) முதல் இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.srilankacricket.lk இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டிக்கெட் வாங்கும் பார்வையாளர்கள் போட்டிகளைக் காண வரும்போது தங்களுடைய சொந்த QR குறியீட்டை (அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில்) கொண்டு வர வேண்டும் என்று கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் 300 ரூபா முதல் ஆரம்பமாகவுள்ளதுடன் 400, 500 மற்றும் 750 ரூபாவுக்கான டிக்கெட்டுகளையும் ரசிகர்கள் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜுன் 2, 4 மற்றும் 7 ஆகிய திகதிகளில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<