உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான அயர்லாந்து குழாம் அறிவிப்பு

ICC Men's Cricket World Cup Qualifier 2023

265

ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடருக்கான 15 பேர்கொண்ட அயர்லாந்து கிரிக்கெட் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்ரூ பல்பேர்னீ தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பெரி மெக்கார்த்தி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், புதுமுக சுழல் பந்துவீச்சாளர் பென் வைட் முதன்முறையாக ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

கோஹ்லியின் பெயரை கூச்சலிடும் ரசிர்களுக்கு பதில் கூறும் நவீன் உல் ஹக்

மேற்குறிப்பிட்ட இரண்டு மாற்றங்களுடன் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த பீட்டர் மூர் மீண்டும் ஒருநாள் குழாத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

பெரி மெக்கர்த்தியின் வருகையுடன் ஜோஷ் லிட்டில், மார்க் அடைர், கிரைக் யங், கேர்டிஸ் கேம்பர் மற்றும் கிரேம் யூம் என அயர்லாந்து அணியின் வேகப் பந்துவீச்சுத்துறை பலமிக்கதாக மாறியுள்ளது.

அதுமாத்திரமின்றி துடுப்பாட்டத்தை பொருத்தவரை அணித்தலைவர் பல்பேர்னியுடன் போல் ஸ்டேலிங், ஹெரி டெக்டர் மற்றும் லோர்கன் டக்கர் ஆகிய முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், அயர்லாந்து அணி குழு Bயில் இடம்பெற்றுள்ளது. குழு Bயில் இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளை அயர்லாந்து அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து குழாம்

அன்ரூ பல்பேர்னீ (தலைவர்), மார்க் அடைர், கேர்டிஸ் கேம்பர், கெரத் டெலனி, ஜோர்ஜ் டொக்ரெல், கிரேம் யூம், ஜோஷ் லிட்டில், எண்டி மெக்பிரைன், பெரி மெக்கார்த்தி, பீட்டர் மூர், போல் ஸ்டேர்லிங், ஹெரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரைக் யங்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<