வடமாகாண சம்பியனாகிய யாழ் மாவட்ட அணி

1527

இலங்கை கிரிக்கெட் சபை மாவட்ட ரீதியில் 23 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக ஒழுங்கு செய்த T20 கிரிக்கெட் தொடரில் வட மாகாணத்தின் சம்பியனாக யாழ்ப்பாண இளையோர் அணி நாமம் சூடியிருக்கின்றது.

இந்த T20 தொடரில் கடந்த 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெற்ற 7 கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளுக்கு அமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பொலன்னறுவை, கேகாலை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் ராணவுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்!

வட மாகாண குழுவில் காணப்பட்டிருந்த யாழ்ப்பாண அணி மன்னாரை தமது குழுவின் இறுதி குழுநிலைப் போட்டியில் எதிர்கொண்டிருந்ததோடு, மன்னாரிற்கு எதிராக 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்தது.

மேலும், இந்த வெற்றி அடங்கலாக தமது குழுவில் 4 போட்டிகளில் விளையாடிய யாழ்ப்பாண அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்து, வட மாகாணத்தின் மாவட்ட சம்பியனாக தெரிவானது. அதேநேரம் யாழ்ப்பாண அணி விளையாடவிருந்த ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மறுமுனையில் மற்றுமொரு போட்டியும் கவனிக்க வேண்டிய ஆட்டமாக மாறியது. இந்தப் போட்டியில் கண்டி அணியானது மட்டக்களப்பினை 7 ஓட்டங்களுக்குள் மடக்கி இருந்ததுடன், போட்டி முழுமையாக வெறும் 10.3 ஓவர்களில் நிறைவடைந்திருந்தது.

இப்போட்டியில் கண்டி அணிக்காக ஆடிய இசிறி மீகாம்மன்ன வெறும் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்கோர் விபரங்கள்

மன்னார் – 65 (19.5) T. ரீத்தனா 26, முரளிதாசன் மதுரிக்கா 4/13, ரத்னேஸ்வரன் நிதர்சனா 3/11, செல்வராசா கிறிஸ்டிகா 2/16

யாழ்ப்பாணம் – 69/0 (10.5) சானு பாஸ்கரன் 31*

முடிவுயாழ்ப்பாணம் 10 விக்கெட்டுக்களால் வெற்றி  


நுவரெலியா – 66 (15.2) சுகிர்தா ரவிச்சந்திரன் 4/18, ஜூலியானா ஜேசுதாசன் 3/13

மட்டக்களப்பு – 67/8 (17.2) ராஷ்மி சாமரா 2/12, பாக்யா சந்ததேவ்மினி 2/22

முடிவுமட்டக்களப்பு 2 விக்கெட்டுக்களால் வெற்றி


பொலன்னறுவை – 107/5 (20) ஹிருஷிகா நிமான்தி 33, ஜனனி மயூரிகா 30*, திலிம நேத்மினி 3/24

புத்தளம் – 94 (16.3) திலிம நேத்மினி 21, சுபான்யா நிஷாதி 3/24, ஹிருஷிகா நிமான்தி 2/10

முடிவு பொலன்னறுவை 13 ஓட்டங்களால் வெற்றி


திருகோணமலை – 47 (16.2) கவிந்தியா நிதுசிாக 2/10, நதீசானி செனவிரத்ன 2/14

கேகாலை – 48/1 (9.5)

முடிவு கேகாலை 9 விக்கெட்டுக்களால் வெற்றி


குருநாகல் – 131/4 (20) மனீஷா சகுமனி 37

மாத்தளை – 64/7 (20) புத்தி திசநாயக்க 28*, ஹன்சிக்கா நிபுனி 2/4, ஆசானி கௌசல்யா 2/14

முடிவு குருநாகல் 67 ஓட்டங்களால் வெற்றி


மட்டக்களப்பு – 7 (8.2) இசிறி மீகம்மன்ன 5/1, நிமேஷிகா செனவிரத்ன 2/5

கண்டி – 8/0 (2.1)

முடிவு கண்டி 10 விக்கெட்டுக்களால் வெற்றி


அம்பாறை – 35 (9.5) N சதுனிக்கா 3/0, D கிருஷான்தி 3/17

நுவரெலியா – 36/6 (14.5) மல்சானி செயுமினி 3/7

முடிவு நுவரெலியா 4 விக்கெட்டுக்களால் வெற்றி

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<