ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையில் அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சுற்றுத்தொடருக்கான ஆப்கான் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கான் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.
>> சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் புதிய மாற்றம்
இந்த சுற்றுத் தொடருக்கும் அதனை அடுத்து ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரிலும் பங்கேற்கும் இலங்கையின் 30 பேர் கொண்ட பூர்வாங்க குழாம் ஞாயிற்றுக்கிழமை (14) அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை சுற்றுத்தொடருக்கான தமது குழாத்தினை ஆப்கானிஸ்தான் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.
ஹஷ்மத்துல்லா சஹீதியின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்தம் 15 பேர் அடங்கிய இந்த ஆப்கான் குழாத்தில் 21 வயதே நிரம்பிய அறிமுக வேகப் பந்துவீச்சாளரான அப்துல் ரஹ்மான் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
இதேநேரம் தற்போது IPL போட்டிகளில் விளையாடி வருகின்ற சுழல் நட்சத்திரம் ரஷீட் கான், ரஹ்மனுல்லா குர்பாஸ், நூர் அஹ்மட் மற்றும் பசால்ஹக் பரூக்கி ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் ஆப்கான் அணியின் நிரந்தர வீரர்களாக இடம்பெற்றிருக்க, மொஹமட் நபியின் அனுபவ ஆட்டமும் ஆப்கான் அணிக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்கள் தவிர அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களான றஹ்மத் ஷாஹ், நஜிபுல்லா சத்ரான், இப்ராஹிம் சத்ரான் மற்றும் அணித்தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி ஆகியோர் காணப்பட, பந்துவீச்சு பொறுப்பு ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோரிடம் காணப்படுகின்றது.
இதேவேளை அனுபவ வீரரான குல்படின் நயீப்புடன் சஹிதுல்லா கமால், யாமின் அஹ்மட்சாய் மற்றும் ஷியா உர் ரஹ்மான் ஆகியோர் இலங்கை தொடரின் போது மேலதிக வீரர்களாக களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> சென்னை அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆப்கான் ஒருநாள் குழாம்
ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), ரஹ்மத் சாஹ் (பிரதி தலைவர்), றஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹஸ்ஸன், நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி, இக்ராம் அலிகில், அஷ்மத்துல்லா ஓமர்சாய், ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான், நூர் அஹ்மட், அப்துல் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி, பரீட் அஹ்மட் மலிக்
மேலதிக வீரர்கள்
குல்படின் நயீப், சஹிதுல்லா கமால், யாமின் அஹ்மட்சாய், ஷியா உர் ரஹ்மான்
சுற்றுத் தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 02 – ஹம்பந்தோட்டை
- இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 04 – ஹம்பந்தோட்டை
- மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 07 – ஹம்பந்தோட்டை
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<