உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான மே.இ.தீவுகள் குழாம் அறிவிப்பு

1991

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் குழாம் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஐக்கிய அரபு இராச்சிய ஒருநாள் சுற்றுப் பயணத்திற்கான குழாம் என்பன அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய இரண்டு அணிகளையும் தெரிவு செய்வதற்காக ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் நடைபெறுகின்றது.

IPL வரலாற்றில் சரித்திரம் படைத்த சாஹல்

மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணத்துக்கான நேரடி தகுதியை இழந்து உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் விளையாடும் நிலையினை எதிர் கொண்டிருப்பதோடு, உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கு முன்னர் அவ்வணி ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.  எனவே, இந்த இரு தொடர்களிலும் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணிக் குழாம்களே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் அணியிலும், ஐக்கி அரபு இராச்சிய சுற்றுப் பயண அணியிலும் சகலதுறைவீரரான கீமோ போல் இடம்பெற்றிருக்கின்றார். இறுதியாக 2022ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலேயே மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டியொன்றில் ஆடிய அவர் தனக்கு ஏற்பட்ட உபாதையின் பின்னர் மீண்டும் அணியில் இணைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தவிர இடதுகை சுழல்வீரரான குடாகேஸ் மோதியிற்கும் இரு குழாம்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

எனினும், அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருநாள் குழாம்களில் சிம்ரோன் ஹெட்மேயரிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் புதுமுக வீரர்களான அலீக் அதானேஷே, கேவேம் ஹோட்ஜ், டோமினிக் ட்ரேக் மற்றும் அகீம் ஜோர்டன் ஆகிய நால்வருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் அலீக் அதானேஷே இடதுகை துடுப்பாட்டவீரர் என்பதோடு, ஏனைய மூவரும் சகலதுறைவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர துடுப்பாட்டவீரரான ஷேய் ஹோப் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு பிரதி தலைவர் பொறுப்பு இப்போது IPL போட்டிகளில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரொவ்மன் பவலிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஜெய்ஸ்வாலின் அதிவேக அரைச்சதத்தோடு ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றி

ரொவ்மன் பவல் தவிர IPL போட்டிகளில் விளையாடி வரும் ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசேன், அல்சாரி ஜோசெப், கைல் மேயர்ஸ் மற்றும் நிகோலஸ் பூரான் ஆகியோரும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் குழாம் (ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுத் தொடர்)

ஷேய் ஹோப் (தலைவர்), பிரன்டன் கிங் (பிரதி தலைவர்), அலீக் அதானஷே, சாமர் புரூக்ஸ், யேனிக் கெரையா, கீசி கார்டி, ரொஸ்டன் சேஸ், டோமினிக் ட்ரேக்ஸ், கேவம் ஹோட்ஜ், அகீம் ஜோர்டன், குடாகேஷ் மோட்டி, கீமொ போல், ரெய்மன் ரெய்பர், ஓடியன் ஸ்மித், டெவோன் தோமஸ்

மேற்கிந்திய தீவுகள் குழாம் (உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்)

ஷேய் ஹோப் (தலைவர்), ரொவ்மன் பவல் (பிரதி தலைவர்), சாமர் புரூக்ஸ், யேனிக் கெரையா, கீசி கார்டி, ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசேன், அல்சாரி ஜோசேப், பிரன்டன் கிங், குடாகேஷ் மோட்டி, கீமொ போல், நிகோலஸ் பூரான், ரொமாரியோ செபார்ட்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

,