தசுன் ஷானக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆட ஒப்பந்தம்

Major League Cricket 2023

1078
Seattle Orcas has roped in Dasun Shanaka

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவர் தசுன் ஷானக,  அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் சியட்டல் ஓர்கஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் இலங்கையின் 5வது வீரராக தசுன் ஷானக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

>> சூர்யகுமார், நெஹால் வதேரா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

இந்தப் போட்டித்தொடருக்காக ஏற்கனவே நடைபெற்ற வீரர்கள் வரைவில் இலங்கையைச் சேர்ந்த 4 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

வனிந்து ஹஸரங்க வொசிங்டன் பிரீடம் அணிக்காகவும், செஹான் ஜயசூரிய மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் சியட்டல்ஸ் ஓர்கஸ் அணிக்காவும், லஹிரு மிலந்த டீம் டெக்ஸஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இந்த வரிசையில் தற்போது தசுன் ஷானகவும் இணைந்துள்ளார். இதில், செஹான் ஜயசூரிய, அஞ்செலோ பெரேரா மற்றும் லஹிரு மிலந்த ஆகியோர் உள்ளூர் வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு அணிகள் பங்கேற்கும் மேஜர் லீக் T20 கிரிக்கெட் தொடரில் லொஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், டீம் டெக்ஸஸ், வொசிங்டன் பிரீடம், சியட்டல்ஸ் ஓர்கஸ், எம்.ஐ. நியூவ் யோர்க் மற்றும் சென் பிரான்சிக்கோ யுனிகோர்ன்ஸ் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. அதேநேரம் தொடரானது எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<