இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அணிகள் பங்கேற்கும் மகளிருக்கான 23 வயதின் கீழ் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த தொடரானது ஏப்ரல் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 26 அணிகள் தொடரில் விளையாடுகின்றன.
>>இலங்கை – பங்களாதேஷ் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம்!
அதன்படி ஒரு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட அணிகள் தங்களுக்குள் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், அதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி சம்பியனாகும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் வட மாகாணம், தென் மாகாணம், வட மத்திய மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணம் என ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண போட்டி அட்டவணை
மேல் மாகாண போட்டி அட்டவணை
மத்திய மாகாண போட்டி அட்டவணை
வடமத்திய மாகாண போட்டி அட்டவணை
தென் மாகாண போட்டி அட்டவணை
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<