RCB அணியில் இணையும் வர்ணனையாளர்

503

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கேதர் ஜாதவ் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான IPL தொடரின் வீரர்கள் ஏலத்தில் 38 வயது நிரம்பிய கேதர் ஜாதவ் எந்தவொரு அணியினாலும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக அவர் IPL போட்டிகளுக்கான மராத்திய மொழிக்கான வர்ணனையாளர்கள் குழாத்தில் இடம்பெற்றிருந்தார்.

>> டிம் டேவிட்டின் அதிரடியோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி 

இந்த நிலையில் IPL போட்டிகளில் ஆடும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சகலதுறைவீரரான டேவிட் வில்லி, காலில் காயத்திற்கு முகம் கொடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் டேவிட் வில்லியின் பிரதியீட்டு வீரராகவே கேதர் ஜாதவ் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைகின்றார். எனவே IPL வர்ணனையினைக் கைவிட்டு றோயல் செலஞ்சர்ஸ் அணியுடன் IPL ஆடும்  வீரராக கேதர் ஜாதவ் இணைகின்றார்.

இதேவேளை, இந்திய நாணயப்படி ஒரு கோடி ரூபாய்க்கு (இலங்கை நாணயப்படி சுமார் 3.91 கோடி ரூபாய்க்கு) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது கேதர் ஜாதவினை ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

>> த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

கடந்த 2010ஆம் ஆண்டு IPL அறிமுகம் பெற்ற போதும் கேதர் ஜாதவ், இதற்கு முன்னர் மொத்தமாக 17 போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். அதோடு, டெல்லி கெபிடல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக மொத்தமாக 93 IPL போட்டிகளில் விளையாடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி IPL அணிகளுக்கான புள்ளிப்பட்டியலில் தற்போது 5 வெற்றிகளுடன் ஐந்தாம் இடத்தில் காணப்படுவதோடு, தமது அடுத்த IPL போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (06) டெல்லி கெபிடல்ஸ் அணியினை எதிர்கொள்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<