அயர்லாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணி நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரட்ன ஆகியோர் பெற்றுக் கொண்ட சதங்களோடு பலமான நிலையினை அடைந்திருக்கின்றது.
கேம்பர், ஸ்டேர்லிங்கின் துடுப்பாட்டத்தோடு முதல் இன்னிங்ஸில் வலுப்பெற்ற அயர்லாந்து
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை – அயர்லாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (25) போதிய வெளிச்சமின்றி நிறைவடைந்த போது அயர்லாந்தின் அபார முதல் இன்னிங்ஸ் (492) துடுப்பாட்டத்தை அடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி 81 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்பட்டிருந்தது. களத்தில் ஆரம்பவீரர்களாக களம் வந்திருந்த நிஷான் மதுஷ்க 41 ஓட்டங்களோடும், திமுத் கருணாரட்ன 39 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் போட்டியின் மூன்றாம் நாளில் இன்று தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணிக்கு திமுத் கருணாரட்ன மற்றும் நிஷான் மதுஷ்க ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியதோடு, இருவரும் இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றையும் உருவாக்கினர்.
மூன்றாம் நாளின் மதிய போசணத்தோடு இரண்டு வீரர்களதும் இணைப்பாட்டம் திமுத் கருணாரட்னவின் விக்கெட் பறிபோக நிறைவுக்கு வந்ததோடு, 228 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டத்திற்கு காரணமாக இருந்த திமுத் கருணாரட்ன மற்றும் நிஷான் மதுஷ்க ஆகிய இருவரும் சதம் விளாசியிருந்தனர். இதில் நிஷான் மதுஷ்க டெஸ்ட் போட்டிகளில் கன்னி சதம் பெற்றிருந்தார்.
இதில் இப்போட்டி மூலம் அடுத்தடுத்த சதங்களை விளாசிய திமுத் கருணாரட்ன தன்னுடைய 16ஆவது டெஸ்ட் சதத்தோடு 133 பந்துகளில் 15 பௌண்டரிகள் அடங்கலாக 115 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அத்துடன் திமுத் கருணாரட்ன – நிஷான் மதுஷ்க இடையிலான இணைப்பாட்டம் காலி மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியொன்றின் முதல் விக்கெட்டுக்காக பெற்ற கூடுதல் இணைப்பாட்டமாகவும் மாறியது.
கேம்பர், ஸ்டேர்லிங்கின் துடுப்பாட்டத்தோடு முதல் இன்னிங்ஸில் வலுப்பெற்ற அயர்லாந்து
மதிய போசணத்தினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணியினை புதிய துடுப்பாட்டவீரராக வந்த குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்க ஆகிய இருவரும் பலப்படுத்தினர். இதில் குசல் மெண்டிஸ் அரைச்சதம் விளாசிய நிலையில் மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் காலநிலை நிலைமைகள் சீராகாமல் போக, மூன்றாம் நாளின் ஆட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இலங்கை கிரிக்கெட் அணியானது தமது முதல் இன்னிங்ஸிற்காக ஒரு விக்கெட்டினை இழந்து 357 ஓட்டங்கள் பெற்றிருந்து சிறப்பான நிலையில் காணப்பட்டிருந்தது.
இலங்கை அயர்லாந்தை விட தற்போது 135 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படும் நிலையில் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் நிஷான் மதுஷ்க 149 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 83 ஓட்டங்களுடனும் இருந்து நம்பிக்கை தருகின்றனர்.
இன்றைய நாளில் ஒரே விக்கெட்டாக பறிபோன திமுத் கருணாரட்னவின் விக்கெட்டினை கேர்டிஸ் கேம்பர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
James McCollum | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 10 | 28 | 2 | 0 | 35.71 |
Peter Moor | lbw b Asitha Fernando | 5 | 7 | 1 | 0 | 71.43 |
Andy Balbirnie | c Dhananjaya de Silva b Ramesh Mendis | 95 | 163 | 14 | 0 | 58.28 |
Harry Tector | c Dinesh Chandimal b Prabath Jayasuriya | 18 | 44 | 3 | 0 | 40.91 |
Paul Stirling | c Dhananjaya de Silva b Asitha Fernando | 103 | 181 | 9 | 4 | 56.91 |
Lorcan Tucker | b Vishwa Fernando | 80 | 106 | 10 | 0 | 75.47 |
Curtis Campher | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 111 | 229 | 15 | 2 | 48.47 |
Andy McBrine | c & b | 35 | 59 | 3 | 1 | 59.32 |
Graham Hume | lbw b Prabath Jayasuriya | 6 | 23 | 1 | 0 | 26.09 |
Matthew Humphreys | c & b | 7 | 23 | 0 | 0 | 30.43 |
Ben White | not out | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Extras | 22 (b 9 , lb 11 , nb 1, w 1, pen 0) |
Total | 492/10 (145.3 Overs, RR: 3.38) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 24 | 1 | 92 | 2 | 3.83 | |
Asitha Fernando | 22 | 4 | 78 | 2 | 3.55 | |
Prabath Jayasuriya | 58.3 | 13 | 174 | 5 | 2.98 | |
Ramesh Mendis | 27 | 4 | 108 | 1 | 4.00 | |
Dhananjaya de Silva | 14 | 5 | 20 | 0 | 1.43 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | lbw b Andy McBrine | 205 | 339 | 22 | 1 | 60.47 |
Dimuth Karunaratne | c Matthew Humphreys b Curtis Campher | 115 | 133 | 15 | 0 | 86.47 |
Kusal Mendis | c Matthew Humphreys b Graham Hume | 245 | 291 | 18 | 11 | 84.19 |
Angelo Mathews | not out | 100 | 114 | 6 | 4 | 87.72 |
Dinesh Chandimal | not out | 13 | 14 | 2 | 0 | 92.86 |
Dhananjaya de Silva | not out | 12 | 17 | 2 | 0 | 70.59 |
Extras | 14 (b 2 , lb 8 , nb 2, w 2, pen 0) |
Total | 704/3 (151 Overs, RR: 4.66) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Graham Hume | 22 | 3 | 87 | 1 | 3.95 | |
Andy McBrine | 57 | 8 | 191 | 1 | 3.35 | |
Curtis Campher | 20 | 1 | 101 | 1 | 5.05 | |
Matthew Humphreys | 10 | 0 | 67 | 0 | 6.70 | |
Ben White | 34 | 1 | 203 | 0 | 5.97 | |
Harry Tector | 8 | 0 | 45 | 0 | 5.62 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
James McCollum | b Ramesh Mendis | 10 | 16 | 2 | 0 | 62.50 |
Peter Moor | c Angelo Mathews b Prabath Jayasuriya | 19 | 39 | 1 | 2 | 48.72 |
Andy Balbirnie | c Angelo Mathews b Ramesh Mendis | 46 | 101 | 5 | 0 | 45.54 |
Harry Tector | b Asitha Fernando | 85 | 189 | 8 | 3 | 44.97 |
Paul Stirling | c Kusal Mendis b Prabath Jayasuriya | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Lorcan Tucker | b Asitha Fernando | 13 | 23 | 2 | 0 | 56.52 |
Curtis Campher | c Kusal Mendis b Ramesh Mendis | 12 | 33 | 2 | 0 | 36.36 |
Andy McBrine | c Dhananjaya de Silva b Ramesh Mendis | 10 | 19 | 2 | 0 | 52.63 |
Graham Hume | c Sadeera Samarawickrama b Ramesh Mendis | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Matthew Humphreys | not out | 4 | 31 | 1 | 0 | 12.90 |
Ben White | b Asitha Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 2 (b 0 , lb 2 , nb 0, w 0, pen 0) |
Total | 202/10 (77.3 Overs, RR: 2.61) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 6 | 1 | 15 | 0 | 2.50 | |
Prabath Jayasuriya | 32 | 9 | 88 | 2 | 2.75 | |
Ramesh Mendis | 27 | 6 | 64 | 5 | 2.37 | |
Asitha Fernando | 11.3 | 3 | 30 | 3 | 2.65 | |
Dhananjaya de Silva | 1 | 0 | 3 | 0 | 3.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<