டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் சன்ரைசர்ஸ் வீரர்

IPL 2023

767

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக இளம் துடுப்பாட்ட வீரர் பிரியம் கிராக் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்லேஷ் நாகர்கொடி உபாதைக்கு முங்கொடுத்திருந்தார். இவருடைய முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்ததுடன் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

>> மாற்றங்களின்றி களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணி 

தற்போது தொடர்ந்தும் இவரால் போட்டிகளில் விளையாட முடியாத காரணத்தால் அவர் இவ்வருட IPL தொடரிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்லேஷ் நாகர்கொடி அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் துடுப்பாட்ட வீரர் பிரியம் கிராக் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவருடைய நிர்ணயத்தொகையான 20 இலட்சம் ரூபாவுக்கு டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.

பிரியம் கிராக் ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடிவந்ததுடன், மொத்தமாக 21  IPL போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<