பஞ்சாப்பை வீழ்த்திய குஜராத் டைடன்ஸ்

238

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 18ஆவது லீக் போட்டியில் பஞ்சாப்  கிங்ஸ் அணியினை குஜராத் டைடன்ஸ் 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

போராடி தோல்வியினைத் தழுவிய சென்னை சுபர் கிங்ஸ்

இந்த போட்டி நேற்று (13) மொஹாலியில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைடன்ஸ் தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை துடுப்பாட பணித்திருத்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 8  விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மெதிவ் சோர்ட் 24 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார். இதேவேளை, ஷாஹ்ரூக் கான் இறுதிநேர அதிரடியுடன் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் மோஹிட் சர்மா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 154 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைடன்ஸ்  அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களுடன் அடைந்தது.

குஜராத் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியை உறுதி செய்த சுப்மன் கில் அரைச்சதம் விளாசி 49 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பெளண்டரி அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

ஆவேஸ் கானுக்கு எதிராக BCCI ஒழுக்காற்று நடவடிக்கை

மறுமுனையில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ககிஸோ றபாடா, ஹர்ப்பிரீத் ப்ரார் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக குஜராத் டைடன்ஸ் அணியின் மோஹிட் சர்மா தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸ் – 153/8 மெதிவ் சோர்ட் 36(24), மோஹிட் சர்மா 18/2(4)

குஜராத் டைடன்ஸ் – 154/4 (19.5) சுப்மான் கில் 67(49)

முடிவு – குஜராத் டைடன்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<