இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இந்த தொடர் இம்மாதம் 28ம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>>இலங்கையின் ஒருநாள் உலகக் கிண்ண தகுதி குறித்து சனத்
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரானது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான போட்டிகளாக அமையவுள்ளது.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் 25ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதுடன், 27ம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது.
சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் ஏப்ரல் 28ம் திகதி முதல் மே 12ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- பயிற்சிப்போட்டி (ஒருநாள்) – ஏப்ரல் 27
- முதல் ஒருநாள் போட்டி – ஏப்ரல் 29
- இரண்டாவது ஒருநாள் போட்டி – மே 2
- மூன்றாவது ஒருநாள் போட்டி – மே 4
- பயிற்சிப்போட்டி (T20) – மே 7
- முதல் T20i போட்டி – மே 9
- இரண்டாவது T20i போட்டி – மே 11
- மூன்றாவது T20i போட்டி – மே 12
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<