இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அயர்லாந்து குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்ரூவ் பல்பர்னீ தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட அயர்லாந்து குழாத்தில், அணியின் அனுபவ வீரர்கள் பலர் தமக்கான இடங்களை பிடித்துள்ளனர்.
>> PL தொடரிலிருந்து வெளியேறிய கேன் வில்லியம்சன்
இதில் முன்னணி வீரர்களில் ஒருவரான போல் ஸ்ரேலிங் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளதுடன், இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போல் ஸ்ரேலிங்கின் பணிச்சுமை காரணமாக முதல் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை என அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஏனைய வீரர்கள் அனைவரும் இரண்டு போட்டிகளிலும் விளையாட தயாராக இருப்பதுடன் மார்க் அடைர், ஜோர்ஜ் டொக்ரெல், பீட்டர் மூர், ஹெரி டெக்டர், பென் வைட் மற்றும் கேர்டிஸ் கேம்பர் ஆகிய முன்னணி வீரர்கள் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 24ஆம் திகதிகளில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து டெஸ்ட் குழாம்
அன்ரூவ் பல்பர்னீ (தலைவர்), மார்க் அடைர், கேர்டிஸ் கேம்பர், முரே கொமின்ஸ், பியோன் ஹேண்ட், கிரேட் ஹுமே, மெதிவ் ஹெம்ரைஷ், டொம் மேயஸ், அன்ரூவ் மெக்பிரின், ஜேம்ஷ் மெக்கோலம், போல் ஸ்ரேலிங், பீட்டர் மூர், ஹெரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<