Home Tamil இன்னிங்ஸ் தோல்வியினைத் தவிர்க்க போராடும் இலங்கை

இன்னிங்ஸ் தோல்வியினைத் தவிர்க்க போராடும் இலங்கை

647

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி மோசமான முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி இருப்பதோடு, அது இலங்கை வீரர்கள் பலோவ் ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடவும் காரணமாகியிருக்கின்றது.

வில்லியம்சன், நிக்கோல்ஸின் இரட்டைச் சதங்களுடன் வலுப்பெற்ற நியூசிலாந்து

வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (18) நிறைவுக்கு வந்த போது நியூசிலாந்தின் இமாலய முதல் இன்னிங்ஸை (580/4d) அடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த திமுத் கருணாரட்ன 16 ஓட்டங்களையும், Nightwatchman வீரரான பிரபாத் ஜயசூரிய 4 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

இதன் பின்னர் இன்று (19) போட்டியின் மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பிரபாத் ஜயசூரிய 04 ஓட்டங்களுடன் டிம் சௌத்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிரபாத் ஜயசூரியவின் பின்னர் மேட் ஹென்ரியின் வேகத்தினை சமாளிக்க முடியாமல் அஞ்செலோ மெதிவ்ஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஜோடி பொறுப்பான முறையில் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கத் தொடங்கி இருந்ததோடு குறித்த இணைப்பாட்டம் மூன்றாம் நாளின் மதிய போசணம் வரை நீடித்தது.

மதிய போசணத்தின் பின்னர் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டாக தினேஷ் சந்திமால் மைக்கல் பிரஸ்வெலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தினேஷ் சந்திமால் 4 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்ததோடு, ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக அவர் 80 ஓட்டங்களை பகிர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சந்திமாலின் விக்கெட்டின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தடுமாறியதோடு இறுதியில் 66.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 164 ஓட்டங்களை மாத்திரமே  முதல் இன்னிங்ஸில் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக திமுத் கருணாரட்ன தன்னுடைய 33ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 9 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மைக்கல் பிரஸ்வெல் மற்றும் மேட் ஹென்ரி ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IPL ஆட நியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறும் மற்றுமொரு வீரர்

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால் மீண்டும் பலோவ் ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடத் தொடங்கியது. அதன்படி இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணிக்கு ஓசத பெர்னாண்டோ மீண்டும் ஏமாற்றம் தந்தார். முதல் இன்னிங்ஸில் 06 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்த அவர் இம்முறை 05 ஓட்டங்களையே எடுத்தார்.

இதன் பின்னர் மீண்டும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் திமுத் கருணாரட்ன அரைச்சதம் விளாசியதோடு, குசல் மெண்டிஸ் தனது பங்கிற்கு அணிக்கு பெறுமதி சேர்த்தார். அதன்படி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 113 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

இலங்கை நியூசிலாந்தை விட 303 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படும் நிலையில் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் ஒரு ஓட்டத்துடனும் காணப்படுகின்றனர். இதேநேரம், ஆட்டமிழந்த திமுத் கருணாரட்ன 4 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

நியூசிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் டோக் பிரஸ்வெல் மற்றும் டிம் சௌத்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


New Zealand
580/4 (123)

Sri Lanka
164/10 (66.5) & 358/10 (142)

Batsmen R B 4s 6s SR
Tom Latham c Prabath Jayasuriya b Kasun Rajitha 21 73 0 0 28.77
Devon Conway c & b Dhananjaya de Silva 78 108 13 0 72.22
Kane Williamson c b Prabath Jayasuriya 215 296 23 2 72.64
Henry Nicholls not out 200 240 15 4 83.33
Daryl Mitchell c & b Kasun Rajitha 17 12 1 1 141.67
Tom Blundell not out 17 17 0 0 100.00


Extras 32 (b 2 , lb 17 , nb 8, w 5, pen 0)
Total 580/4 (123 Overs, RR: 4.72)
Bowling O M R W Econ
Kasun Rajitha 32 6 126 2 3.94
Asitha Fernando  26 6 110 0 4.23
Lahiru Kumara 25 1 164 0 6.56
Dhananjaya de Silva 19 3 75 1 3.95
Prabath Jayasuriya 21 1 86 1 4.10
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Tom Blundell b Matt Henry 6 32 0 0 18.75
Dimuth Karunaratne c Tom Latham b Michael Bracewell 89 188 9 0 47.34
Kusal Mendis c Devon Conway b Doug Bracewell 0 10 0 0 0.00
Prabath Jayasuriya c Daryl Mitchell b Tim Southee 4 17 1 0 23.53
Angelo Mathews c Tom Blundell b Matt Henry 1 10 0 0 10.00
Dinesh Chandimal st Tom Blundell b Michael Bracewell 37 92 4 0 40.22
Dhananjaya de Silva c Tim Southee b Michael Bracewell 0 6 0 0 0.00
Nishan Madushka c Michael Bracewell b Matt Henry 19 31 3 0 61.29
Kasun Rajitha run out (Tom Latham) 0 9 0 0 0.00
Lahiru Kumara not out 1 4 0 0 25.00
Asitha Fernando  c Kane Williamson b Blair Tickner 0 3 0 0 0.00


Extras 7 (b 4 , lb 1 , nb 1, w 1, pen 0)
Total 164/10 (66.5 Overs, RR: 2.45)
Bowling O M R W Econ
Tim Southee 15 6 22 1 1.47
Matt Henry 20 6 44 3 2.20
Doug Bracewell 12 7 19 1 1.58
Michael Bracewell 12 1 50 3 4.17
Blair Tickner 6.5 1 21 1 3.23
Daryl Mitchell 1 0 3 0 3.00


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c WA Young b Doug Bracewell 5 36 0 0 13.89
Dimuth Karunaratne c Devon Conway b Tim Southee 51 83 4 0 61.45
Kusal Mendis c Kane Williamson b Matt Henry 50 106 8 0 47.17
Angelo Mathews c Michael Bracewell b Blair Tickner 2 44 0 0 4.55
Dinesh Chandimal c Doug Bracewell b Blair Tickner 62 92 8 0 67.39
Dhananjaya de Silva c Henry Nicholls b Michael Bracewell 98 185 12 1 52.97
Nishan Madushka c Tim Southee b Blair Tickner 39 93 4 1 41.94
Kasun Rajitha c Kane Williamson b Tim Southee 20 110 1 0 18.18
Prabath Jayasuriya c Blair Tickner b Michael Bracewell 2 45 0 0 4.44
Lahiru Kumara c Michael Bracewell b Tim Southee 7 45 1 0 15.56
Asitha Fernando  not out 0 15 0 0 0.00


Extras 22 (b 0 , lb 6 , nb 2, w 14, pen 0)
Total 358/10 (142 Overs, RR: 2.52)
Bowling O M R W Econ
Tim Southee 27 13 51 3 1.89
Matt Henry 29 8 59 1 2.03
Michael Bracewell 42 14 100 2 2.38
Doug Bracewell 18 3 58 1 3.22
Blair Tickner 26 6 84 3 3.23



போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<