டுபாய் சர்வதேச பாரா மெய்வல்லுனரில் இலங்கைக்கு 4 பதக்கங்கள்

237
Sri Lanka Won Four Medals at the 14th Fazz Dubai Grand Prix 2023

டுபாயில் நடைபெற்ற 14ஆவது Fazza Dubai Grand Prix மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட இலங்கை பாரா அணி வீரர்கள் நான்கு பதக்கங்களை வென்றனர்.

இதன்படி, 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் நான்கு பதக்கங்களை இந்தப் போட்டித் தொடரில் பங்குகொண்ட நான்கு வீரர்களும் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> சர்வதேச பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 4 இலங்கையர்

ஆண்களுக்கான T47 400 மீட்ட ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மதுரங்க சுபசிங்கவும், ஆண்களுக்கான T42 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அனில் பிரசன்னவும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

இதனிடையே, ஆண்களுக்கான T44 100 மீற்றர் போட்டியில் இலங்கை சார்பில் களமிறங்கிய நுவன் இந்திக வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல, ஆண்களுக்கான T46 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பிரதீப் சோமசிறி வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<