ஜொப்ரா ஆர்ச்சர் IPL தொடர் முழுவதும் விளையாடுவாரா?

IPL 2023

230
Archer available for entire IPL

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பை அணிக்காக முழுமையாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு ஏலத்தில் 8 கோடி ரூபாவுக்கு ஜொப்ரா ஆர்ச்சர் விலைபோயிருந்தார். எனினும், கடந்த ஆண்டு தொடரில் அவர் உபாதை காரணமாக விளையாடவில்லை.

>> புதுமுக வீரர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் T20 அணி

இந்தநிலையில் ஜொப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றுமொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவுடன் இணைந்து இந்த ஆண்டு விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

எவ்வறாயினும் உபாதை காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ரா இம்முறை IPL தொடரில் விளையாடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அணியின் முன்னணி பந்துவீச்சாளராக முழுமையான தொடரிலும் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா? என்ற கேள்விகள் வெளியாகியிருந்தன.

ஜொப்ரா ஆர்ச்சர் IPL தொடரில் முழுமையாக விளையாடுவாரா? மற்றும் அவருடைய உடற்தகுதி தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை கருத்து வெளியிட்டுள்ளது.

“அவர் IPL தொடரில் முழுமையான பங்கை வகிக்க முடியும், எப்போதும் போன்று அவருடைய உரிமையாளர்களும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் பணிச்சுமையை நிர்வகிப்பார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் ஜொப்ரா ஆர்ச்சரின் பணிச்சுமைகள் தொடர்ந்தும் கவனிக்கப்பட்டு வரும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<