விக்கெட் வேட்டையில் வியாஸ்காந்த், விதுசன்

430

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்திருக்கும் 23 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்கான முன்னணி கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற போட்டிகளில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

IPL தொடரிலிருந்து வெளியேறும் ஜஸ்ப்ரிட் பும்ரா?

இதில் தமிழ் யூனியன் மற்றும் NCC அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சுழல் பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அதேவேளை, NCC மற்றும் தமிழ் யூனியன் அணிகள் இடையிலான போட்டி சமநிலை அடைந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் வெற்றியினை தமிழ் யூனியன் அணி பதிவு செய்தது.

இதேநேரம், சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடும் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு சுழல்வீரரான தீஷன் விதுசன் புளூம்பீல்ட் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இதனால் புளூம்பீல்ட் அணி 69 ஓட்டங்களுடன் சுருண்டது. இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்கின்றது. அதேநேரம், முதல் நாளில் சோனகர் அணிக்காக துடுப்பாடியிருந்த மொஹமட் சமாஸ் அரைச்சதம் தாண்டி 58 ஓட்டங்களுடன் களத்தில் நின்றிருந்தார்.

கிரிக்கெட் யாப்பு குழுவில் இருந்து விலகும் பர்வீஸ் மஹரூப்

நேற்றைய நாளின் போட்டிகளின் சுருக்கம்

NCC 107 (16) அம்ஷி டி சில்வா 36, நவீன் பெர்னாண்டோ 5/36 & 310 (68.4) அஹான் விக்கிரமசிங்க 90*, கலன விஜேசிரி 64, விஜயகாந்த் வியாஸ்காந்த் 5/107

தமிழ் யூனியன் 331/5d (65) சித்தார ஹப்புகின்ற 112, தரிந்து ஹர்ஷன 71, மதிஸ பத்திரன 2/62 & 70/4 (10) கமேஷ் நிர்மால் 32*

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது


குருநாகல் இளையயோர் கிரிக்கெட் கழகம் – 242 (80.5) கயான் வீரசிங்க 82, செஹாத சொய்ஸா 5/56

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 5/0 (2)

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 240/8 (91) சந்தருவான் சத்சலாக்க 92, தெவிந்து கெகிரிதெனிய 3/81

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


புளூம்பீல்ட் கி.க. – 69 (32.1) தீஷன் விதுசன் 7/27

சோனகர் கிரிக்கெட் கழகம் 309/4 (53) தினுக தில்ஷான் 78, ஜனிஷ்க பெரேரா 67, ஒமேஷ் மெண்டிஸ் 64, மொஹமட் சமாஷ் 58*

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


BRC – 301 (75) பாக்ய திசநாயக்க 98, ஹர்ஷன விக்ரமசிங்க 3/67

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 24/1 (7.3)

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 81 (25.3) ரயான் பெர்னாண்டோ 29, கலன பெரேரா 6/20, அக்மல் பஸ்லீ 3/32

SSC – 165/5 (46) நிப்புன் தனன்ஞய 69

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


காலி கிரிக்கெட் கழகம் – 252/4 (86) வினுர துல்ஷார 117*

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


விமானப்படை கிரிக்கெட் கழகம் – 102 (49.5) வனுஜ சஹான் 8/43

ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் – 148/4 (38) ரவிந்து ரத்நாயக்க 91

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 186 (55.2) ஹசித சமரசிங்க 56. சஷிக துல்ஷான் 6/54

ராகம கிரிக்கெட் கழகம் – 109/1 (33) தெவிந்து டிக்வெல்ல 55*

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது


கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 175 (54.1) ஹிரன்த ஜயசிங்க 67

பொலிஸ் விளையாட்டுக கழகம் – 111/5 (28.4) தினான் சேனுக்க 36

முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<