தென்னாபிரிக்க அணியுடன் இணையும் நெயில் மெக்கன்சி

West Indies tour of South Africa 2023

208

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக முன்னாள் வீரர் நெயில் மெக்கன்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுக்ரி கொன்ரட்டின் கீழ் இவர் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படவுள்ளார்.

இந்திய தொடரில் களமிறங்கும் மெக்ஸ்வெல், மார்ஷ்!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28) ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த இந்த தொடரில் தலைமை பயிற்றுவிப்பாளராக தன்னுடைய முதல் தொடரை சுக்ரி கொன்ரட்டின் ஆரம்பிக்கவுள்ளார். அதேநேரம், இதுவரை காலமும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த சார்ல் லங்கவெல்ட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் பதவியிலிருந்து வெளியேறவுள்ளதுடன், IPL அணியொன்றின் பயிற்றுவிப்பு பதவியை இவர் பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சார்ல் லங்கவெல்ட் விலகியதைத்தொடர்ந்து ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ள பீட் போதா புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இணைந்துக்கொள்ளவுள்ளார்.

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவராக தெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளதுடன், டீன் எல்கர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<