விராட் கோலியின் புதிய சாதனை மைல்கல்

295
Virat Kohli record a new milestone

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,000 ஓட்டங்களை கடந்த ஆறாவது வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

>> தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவராக டெம்பா பவுமா நியமனம்

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (19) டெல்லியில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தமாக 64 ஓட்டங்களை குவித்ததன் மூலமே விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,000 ஓட்டங்களை கடந்த ஆறாவது வீரர் என்கிற சாதனையினைப் பதிவு செய்திருக்கின்றார்.

இதேநேரம் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் 25,000 ஓட்டங்களை பெற்ற இந்திய வீரராக மாறியிருக்கும் விராட் கோலி, இந்த சாதனையை மேற்கொள்வதற்கு குறைந்த இன்னிங்ஸ்களை (549) எடுத்த வீரராகவும் வரலாறு படைத்திருக்கின்றார்.

அதேநேரம், விராட் கோலியின் இந்திய அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, நான்கு போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர்களில் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 25,000 ஓட்டங்களை கடந்த வீரர்களாக காணப்படுவதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<